உலகம்

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் வளர்ந்து வரும் மோதல் நிலைப்பாட்டின் சமீபத்திய சம்பவமாக், சீனாவின் உளவாளியாக அமெரிக்காவில் இருந்து செயல்பட்டதாக சிங்கப்பூர் நபர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்க - சீனா இடையேயான உறவில் மேலும் சிக்கல் ஏற்பட்டு வரும் வகையில் அமெரிக்காவின் அறிவுசார் வளங்களைக் திருடுவதாகவும் அமெரிக்காவை உளவு பார்ப்பதாகவும் சீனா மீது அமெரிக்கா தீவிரமான குற்றச்சாட்டுகளை சாட்டியுள்ளது.

இதன் தொடர்பாக தனித்தனியாக, சீனாவின் இராணுவத்துடனான தனது உறவுகளை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு சீன ஆராய்ச்சியாளர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் செங்குவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா முன்பு உத்தரவிட்டதையடுத்து சீன தூதரக கதவை உடைத்து அமெரிக்கா போலீசார் உள்ளே புகுந்து ஆய்வு மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உளவு பார்க்கும் மையமாக சீன தூதரகம், அமெரிக்காவில் இயங்கிவந்ததாக கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க சிங்கப்பூரை சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் சீனா உளவாளியாக செயல்பட்டதாக கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.