உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 16 536 862
மொத்த இறப்புக்கள் : 654 089
குணமடைந்தவர்கள் : 10 127 772
ஆக்டிவ் தொற்றுக்கள் : 5 755 001
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 66 404

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 4 398 184 : மொத்த இறப்புக்கள் : 150 053
பிரேசில் : 2 423 798 : 87 131
இந்தியா : 1 482 386 : 33 448
ரஷ்யா : 818 120 : 13 354
தென்னாப்பிரிக்கா : 445 433 : 6769
மெக்ஸிக்கோ : 390 516 : 43 680
பெரு : 384 797 : 18 229
சிலி : 347 923 : 9187
ஸ்பெயின் : 319 501 : 28 432
பிரிட்டன் : 300 111 : 45 759
ஈரான் : 293 606 : 15 912
பாகிஸ்தான் : 274 289 : 5842
சவுதி அரேபியா : 268 934 : 2760
கொலம்பியா : 248 976 : 8525
இத்தாலி : 246 286 : 35 112
துருக்கி : 227 019 : 5630
பங்களாதேஷ் : 226 225 : 2965
ஜேர்மனி : 207 043 : 9203
பிரான்ஸ் : 180 528 : 30 192
கனடா : 114 175 : 8891
சீனா : 83 891 : 4634
சுவிட்சர்லாந்து : 34 477 : 1978
இலங்கை : 2805 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் கோவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது. அதாவது உலகம் முழுதும் தொற்றுக்களுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 65 இலட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 1 இலட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளது.

உலகம் முழுதும் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 6 இலட்சத்து 54 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 43 இலட்சத்து 98 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 1 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன. 2 ஆவது இடத்தில் இருக்கும் பிரேசிலில், 24 இலட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 87 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

3 ஆவது இடத்திலுள்ள இந்தியாவில் 14 இலட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 33 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன. பிரேசில் அதிபர் பொல்சனாரோவுக்கு 4 ஆவது முறையாக நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்ததை அடுத்து அவர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோவிட்-19 இலிருந்து குணமடைவதற்காக இந்தியாவின் மலேரியா மருந்தான ஹைட்ரொக்ஸி குளோரோகுயினை எடுத்து வந்த அவர் தான் குணமான தகவலைத் தனது பேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று ஆரம்பித்த தருணம் முதற் கொண்டே வடகொரியாவில் இது பரவவில்லை என்று தெரிவித்து வந்த அந்நாட்டு அதிபர் கிம் முதன் முறையாகத் தற்போது கொரிய தேசங்களுக்கு இடைப்பட்ட எல்லை நகரான கேசாங்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். தென்கொரியாவில் இருந்து சட்ட விரோதமாக எல்லை கடந்து வடகொரியா வந்த நபர் ஒருவர் மூலம் இப்பகுதியில் கொரோனா பரவியிருக்கலாம் என்ற அச்சம் காரணமாகத் தான் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் வடகொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை கேசோங்கில் தமது பகுதியில் இருந்து வடகொரியாவுக்குள் நுழைந்தவருக்கு கொரோனா தொற்றில்லை என தென்கொரியா அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இன்னொருபுறம் உமிழ்நீரைப் பரிசோதிப்பதன் மூலம் கொரோனா தொற்றை விரைவில் கண்டுபிடிக்கக் கூடிய ரேபிட் டெஸ்ட் கருவியொன்றை இஸ்ரேலிய இந்திய மருத்துவ வல்லுனர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இதன் முதற்கட்ட பரிசோதனை இஸ்ரேலில் முடிவடைந்த நிலையில் இந்தியாவில் இதனைப் பரிசோதிக்க இஸ்ரேலிய மருத்துவக் குழு ஒன்று இந்தியா புறப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.