உலகம்

நிகழ்காலத்தில் உலகளவில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே பிராந்திய சமநிலையில் தாக்கம் ஏற்பட்டு போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் சீனாவுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த இராணுவ உதவியினை மறுத்துள்ளது ரஷ்யா..

அதாவது எஸ்-400 என்ற உலகின் தலைசிறந்த ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை சீனாவுக்கு மேலதிகமாக வழங்க ரஷ்யா மறுத்துள்ளது.

இந்த ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பு உலகில் ரஷ்யா தவிர சீனாவிடம் மாத்திரம் தான் சில அலகுகள் இருந்து வந்த நிலையில், இந்தியா தனது முதலாவது இந்த வகையான ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை ரஷ்யாவிடம் இருந்து பெறவுள்ளது. ஒரே நேரத்தில் 72 ஏவுகணைகளை சுடக் கூடிய இந்த எஸ்-400 ஏவுகணை அமைப்பானது 400 கிலோமீட்டர் சுற்றளவில் வரும் ஏவுகணைகள் மற்றும் ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களையும் தாக்கி அழிக்கக் கூடியதாகும். அமெரிக்காவின் மிகச் சக்தி வாய்ந்த எப் 35 ரக போர் விமானங்களையும், ஒரே நேரத்தில் 36 அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளையும் கூட இதனால் தாக்கி அழிக்க முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை சீனா மற்றும் பாகிஸ்தானின் அணுசக்தித் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளில் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் கவசமாக இந்த எஸ்-400 ஏவுகணை அமைப்பு செயற்படக் கூடியதாகும். இந்நிலையில் சீனாவுக்கு இந்த ஏவுகணை அமைப்பை ரஷ்யா வழங்க மறுத்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள அந்த நாடு பெயர் குறிப்பிடாது சில நாடுகளின் அழுத்தத்தால் தான் ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த பல தசாப்தங்களாக சீனாவுக்கு நெருங்கிய நண்பனாகச் செயற்பட்டு வந்த ரஷ்யா சமீப காலமாக இந்தியாவுக்கு பலவித இராணுவத் தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கி வருவதுடன், அமெரிக்காவுடனும், இந்தியாவுடனும் இன்னும் நெருக்கமான நட்பு பாராட்டி வருவதாகப் பார்க்கப் படுகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.