உலகம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான டெக்சாஸில் சமீபத்தில் ஹன்னா என்ற புயலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை மாலை தெற்கு டெக்சாஸின் பாட்ரே என்ற தீவை இந்தப் புயல் இரு முறை கரையைக் கடந்துள்ளது. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

இதில் பல வீடுகளும், கடைகளும் சேதமடைந்தன. இவற்றின் மேற்கூரைகள் தூக்கி வீசப் பட்டன. நூற்றுக் கணக்கான மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள் சாலைகளில் சரிந்தன. இந்தப் புயலுடன் டெக்சாஸின் கடலோரப் பகுதிகளில் கனமழையும் கொட்டியது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. தற்போது டெக்சாஸின் 32 பகுதிகளில் கடும் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இப்பகுதிகளில் மீட்புப் பணிக்கு கொரோனா தொற்று அச்சம் பெரும் தடையாக இருப்பதாக மாகாண ஆளுனர் கிரேக் தெரிவித்துள்ளார்.

இதுவரை டெக்சாஸில் இந்த ஹன்னா புயலால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை. ஆனால் ஆயிரக் கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயிருப்பதாகத் தெரிய வருகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.