உலகம்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

மலேசியாவில் பிரதமராக நஜீப் ரசாக் ஆட்சியில் இருந்தபோது 2015 ஆண்டு அரச முதலீட்டு நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பணமோசடி செய்ததாக புகார் எழுந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் நஜீப் ரசாக்கிற்கு சொந்தமான சொத்துக்கள் மீது சோதனை நடத்தினர். இதில் பெறுமதிமிக்க சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இது குறித்து விசாரணையும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நம்பிக்கை மோசடி, பணமோசடி, அதிகார அத்துமீறல் உள்ளிட்ட ஏழு வழக்குகளில் அவர் குற்றவாளி என அரசுத்தரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. இது தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரனை தொடர்ந்து 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.