உலகம்

ஜெனீவா மாநிலத்தில் இன்று முதல் கடைகள் மற்றும் விமான நிலையங்களில், கொரோனா தொற்றுத் தடுப்பிற்கான முகமூடிப் பாவனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சென்ற வெள்ளிக்கிழமை ஜெனீவா மாநில அரசு இதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. சுவிற்சர்லாந்தில் முகமூடிப் பாவனையைக் கட்டாயமாக்கியுள்ள மூன்றாவது மாநிலமாக ஜெனிவா இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது. ஏற்கனவே, வாட் மற்றும் ஜூரா மாநிலங்கள் இந்த நடவடிக்கையை ஏற்கனவே கட்டாயமாக்கியுள்ளன.

மேலும் திங்களன்று முதல், சுவிற்சர்லாந்தின் விமான நிறுவனங்களான, சுவிஸ், ஹெல்வெடிக் மற்றும் எடெல்விஸ் விமானங்களிலும், மற்றும் அனைத்து ஐரோப்பிய விமானங்களிலும் முகமூடிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜெனிவா விமான நிலையத்திலும் முகமூடிப் பாவனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சென்றவாரத்தின் தொற்றுத் தொடர்பான புள்ளிவிவரங்கள் கவலை அளிப்பதாகத் தெரிவித்த ஜெனிவா பிராந்திய சுகாதாரத் தலைவர், நிலைமை மோசமடைவதற்குள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போதைய நடவடிக்கைகள்  ஒக்டோபர் இறுதிவரை தொடரவேண்டி இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக அறியவருகிறது.

இது இவ்வாறிருக்க, "மிஸ்டர் கோவிட் -19" என வர்ணிக்கப்பட்ட, சுவிஸ் கூட்டமைப்பின் சுகாதார அலுவலகத்தின் முன்னாள் தலைவர் டேனியல் கோக் " சுவிற்சர்லாந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பொறுத்தவரை , தற்போது கடினமான சூழ்நிலையில் உள்ளது எனப் பிரத்தியேக ஊடகச் சந்திப் பொன்றில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கிக்கையில்," இது இரண்டாவது அலை அல்ல, ஆனால் எண்கள் மிக அதிகமாகவுள்ளது. இது இலையுதிர் காலத்தில் அல்லது குளிர்காலத்தில் தொற்றுக்கள் பெருமளவில் அதிகரிக்கும் மிகப் பெரிய ஆபத்து உள்ளது" என்பதை உணர்த்துவதாகக் குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.