உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 18 051 552
மொத்த இறப்புக்கள் : 689 476
குணமடைந்தவர்கள் : 11 348 348
ஆக்டிவ் தொற்றுக்கள் : 6 013 728
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 65 765

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 4 764 588 : மொத்த இறப்புக்கள் : 157 905
பிரேசில் : 2 708 876 : 93 616
இந்தியா : 1 757 393 : 37 452
ரஷ்யா : 850 870 : 14 128
தென்னாப்பிரிக்கா : 503 290 : 8153
மெக்ஸிக்கோ : 434 193 : 47 472
பெரு : 422 183 : 19 408
சிலி : 357 658 : 9533
ஸ்பெயின் : 335 602 : 28 445
ஈரான் : 309 437 : 17 190
கொலம்பியா : 306 181 : 10 330
பிரிட்டன் : 303 952 : 46 193
பாகிஸ்தான் : 279 698 : 5976
சவுதி அரேபியா : 277 478 : 2887
இத்தாலி : 247 832 : 35 146
பங்களாதேஷ் : 240 746 : 3154
துருக்கி : 231 869 : 5710
ஜேர்மனி : 211 077 : 9226
ஆர்ஜெண்டினா : 196 543 : 3596
பிரான்ஸ் : 187 919 : 30 265
கனடா : 116 599 : 8941
சீனா : 84 385 : 4634
சுவிட்சர்லாந்து : 35 550 : 1981
இலங்கை : 2815 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 1 கோடியே 80 இலட்சத்து 51 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 6 இலட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 47 இலட்சத்து 64 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 1 இலட்சத்து 57 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

2 ஆவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 27 இலட்சத்து 8 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 93 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன. 3 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 17 இலட்சத்து 57 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 37 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

கடந்த புதன்கிழமை ஜெனீவாவில் உலக சுகாதாரத் தாபன தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனோம் கருத்துத் தெரிவித்த போது, ஒவ்வொரு 100 வருடத்துக்கும் ஒருமுறை உலகைத் தாக்கக் கூடிய மோசமான கொள்ளை நோய்களில் ஒன்றான கொரோனா தொற்றால் உலகம் தற்போது சந்தித்திருக்கும் இழப்பின் பாதிப்பு இன்னும் பல ஆண்டுகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றுள்ளார்.

மேலும் கொரோனா தொற்று இன்றும் அறிவியல் ரீதியாக ஏற்படுத்தியிருக்கும் பல புதிர்கள் விடுவிக்கப் படாமலே இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் பொது முடக்கத்தால் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரப் பின்னடைவுக்கு ஒரே வலிமையான தீர்வு நன்கு செயற்படக் கூடிய கொரோனா தடுப்பு மருந்து தான். ஆனால் மிக அதிகளவில் இது போன்ற தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கினாலும் அது அனைவரையும் சென்றடைய வெகு காலம் எடுக்கும்.

எனவே அதுவரை அனைவரும் கொரோனாவோடு வாழ்ந்து கொண்டே கைவசம் உள்ள சமூக இடைவெளி, முகக் கவசம் போன்ற வழிமுறைகளைக் கையாண்டு கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் அதனோம் மேலும் தெரிவித்தார். ஜேர்மனி தலைநகர் பேர்லினில் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தனிமனித இடைவெளியைக் கடைப் பிடிப்பது மற்றும் முகக் கவசம் அணிவது என எந்த விதிமுறைகளையும் பின்பற்றாது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை ரஷ்யாவில் ஆக்டோபர் முதல் கொரோனா தடுப்பூசி பொது மக்களுக்குச் செலுத்தப் படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ரஷ்ய சுகாதாரத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்ட போதும், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் 60 மில்லியன் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ள நிலையில், இந்தியாவில் வெறும் 11 மில்லியன் பேருக்கு மாத்திரமே பரிசோதனை செய்யப் பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்பீடு செய்து விமரிசித்துள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில், டிரம்ப் நிர்வாகம் கொரோனாவை சமாளிப்பதில் தோல்வியடைந்ததால் தான் இந்தளவு பாதிப்பு என மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனாலும் மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் அதிக பரிசோதனைகள் செய்யப் படுவதால் தான் தொற்று எண்ணிக்கை அதிகம் இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி வருகின்றார்.

சமீபத்தில் அமெரிக்காவை விட 4 மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் அமெரிக்காவை விட மிகக் குறைவான பரிசோதனை நடத்தப் பட்டுள்ளதாக டிரம்ப் சுட்டிக் காட்டியிருப்பது கடும் விமரிசனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.