உலகம்

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.

இந்நிகழ்வு நாசாவின் சேனல் மூலம் YouTube இல் நேரடியாக ஒளிபரப்பப் பட்டு வருகின்றது. க்ரூ டிராகன் ஓடம் மூலம் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்த அந்த இரு அமெரிக்க விண்வெளி வீரர்களும், பாப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவரும் ஆவர். க்ரு டிராகன் விண் ஓடம் முழுதும் தானியங்கி முறையில் செயற்படக் கூடிய அதி நவீன வடிவமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ISS சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து கழன்று கொண்டுள்ள (Undocking) இந்த க்ரூ டிராகன் ஓடம் தற்போது பூமியை வந்தடைந்துள்ளது.

இது ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஞாயிறு அமெரிக்க நேரப்படி மாலை 2:38 மணிக்கு மெக்ஸிக்கன் வளைகுடாவைச் சேர்ந்த புளோரிடாவில் இருக்கும் பென்சக்கோலா கடற்கரைக்கு அருகே பாரசூட் மூலம் இறங்கியுள்ளது. தற்போது இந்த க்ரூ டிராகன் ஓடம் கப்பல் மூலம் நாசா ஆய்வு மையத்துக்குக் கொண்டு செல்லப் பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.