உலகம்

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

இந்த மூன்று மாநிலங்களுக்கு பெல்ஜியத்தில் இருந்து பயணம் செய்வது "சாத்தியமில்லை அல்லது அங்கீகரிக்கப்படாதது" என்று, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு மாறாக, இந்த மாநிலங்களிலிருந்து பெல்ஜியத்திற்குள் நுழைய விரும்பும் எவரும் தனிமைப்படுத்தப்பட்டு கோவிட் -19 சோதனை செய்ய வேண்டும்.

பெல்ஜியம் ஜூலை நடுப்பகுதியில் ஏற்கனவே டிசினோ மாநிலத்திலிருந்து வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் மற்றும் சோதனைகளை பரிந்துரைத்தது. ஆரஞ்சு பட்டியலில் இணைக்கப்பட்டிருந்த டிசிடீனா மாநிலத்தின் பெயரை, டிசினோ மாநில அரசாங்கம் மற்றும் கன்டோனல் மருத்துவரின் விமர்சனங்களுக்குப் பிறகு, பெல்ஜியத்தில் மத்திய வெளியுறவுத் துறை தலையிட்டு, டிசினோவை ஆபத்து பட்டியலிலிருந்து நீக்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.