உலகம்

இத்தாலி ஜெனோவா நெடுஞ்சாலையில், 2018 ஆகஸ்ட் 14 ம் ஆண்டு இடிந்து விழுந்த "மொராண்டி பாலம்" 43 உயர்களை காவு கொண்டிருந்தது.

அந்தப் பாலம் இடிந்து விழுந்து ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழித்து, இன்று 2020 ஆகஸ்ட் 3, திங்கட் கிழமை " ஜெனோவா சென் ஜோர்ஜோ" எனும் பெயருடன் புதிய பாலம்திறந்து வைக்கபட்டிருக்கிறது.

இத்தாலிய கொடியின் வண்ணங்களைத் தூவியவாறு இத்தாலிய வான்படை விமானங்கள் பறந்து செல்ல, வானவில்லும் வந்து தோன்ற, இத்தாலிய தேசிய கீதம் ஒலிக்க, புகழ்பெற்ற இத்தாலிய கட்டிடக் கலைஞர் ரென்சோ பியானோ வடிவமைத்த புதிய பாலத்தை ஜனாதிபதி செர்ஜியோ மத்தரெல்லா திறந்து வைத்தார்.

மொரான்டினி பாலம் இடிந்ததின் தொடர்ச்சியாக, இத்தாலியின் நெடுஞ்சாலைப் பராமரிப்பு மற்றும் வரி வசூலிப்பில் சக்திவாய்ந்ததாக இருந்த பெனட்டன் குடும்பத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனத்தின் நெடுஞ்சாலை பராமரிப்புக்கான நீண்டகால சலுகையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய உயர் தொழில்நுட்ப கட்டமைப்பில் நான்கு பராமரிப்பு ரோபோக்கள் வானிலை அல்லது அரிப்பைக் கண்டறிய அதன் நீளத்துடன் இயங்கும், அத்துடன் அரிப்பைக் கட்டுப்படுத்த ஒரு சிறப்பு டிஹைமிடிஃபிகேஷன் அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பாலம், செவ்வாய் அல்லது புதன்கிழமை பொது மக்கள் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனோவாவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் பியானோ, தனது வடிவமைப்பில் உருவான புதிய பாலத்தை "சோகத்தால் பிறந்த குழந்தை" என்று விவரித்தார். அதேவேளை இதனை " மறுபிறப்பின் அடையாளம் " எனவும் சிலர் வர்ணித்துள்ளனர்.

இந்தப் புதிய பாலம் திறக்கப்படும் கொண்டாட்டங்களை, விபத்தில் பலியானவர்களின் குடும்பங்கள் பலவும் பகிஷ்கரித்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.