உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 18 585 612
மொத்த இறப்புக்கள் : 700 705
குணமடைந்தவர்கள் : 11 794 237
ஆக்டிவ் தொற்றுக்கள் : 6 090 670
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 65 743

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 4 893 085 : மொத்த இறப்புக்கள் : 159 729
பிரேசில் : 2 759 436 : 95 078
இந்தியா : 1 906 613 : 39 820
ரஷ்யா : 861 423 : 14 351
தென்னாப்பிரிக்கா : 516 862 : 8539
மெக்ஸிக்கோ : 443 813 : 48 012
பெரு : 433 100 : 19 811
சிலி : 362 962 : 9745
ஸ்பெயின் : 349 894 : 28 498
கொலம்பியா : 327 850 : 11 017
ஈரான் : 314 786 : 17 617
பிரிட்டன் : 306 293 : 46 299
சவுதி அரேபியா : 281 456 : 2984
பாகிஸ்தான் : 280 461 : 5999
இத்தாலி : 248 419 : 35 171
பங்களாதேஷ் : 244 020 : 3234
துருக்கி : 234 934 : 5765
ஜேர்மனி : 212 331 : 9232
ஆர்ஜெண்டினா : 206 743 : 3863
பிரான்ஸ் : 192 334 : 30 296
கனடா : 117 333 : 8953
சீனா : 84 464 : 4634
சுவிட்சர்லாந்து : 35 746 : 1981
இலங்கை : 2834 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 1 கோடியே 85 இலட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 7 இலட்சத்தைக் கடந்தும் உள்ளன. ஜூன் 26 ஆம் திகதி 5 இலட்சமாக இருந்த மொத்த இறப்புக்கள் ஜூலை 17 ஆம் திகதி அதாவது 21 நாட்களில் ஒரு இலட்சம் இறப்புக்களைக் கடந்து 6 இலட்சமானது. இதுவே வெறும் 18 நாட்களில் தற்போது இன்னும் 1 இலட்சம் இறப்புக்கள் ஏற்பட்டு 7 இலட்சத்தை ஆகஸ்ட் 4 ஆம் திகதி கடந்துள்ளது.

உலகளவில் இதுவரை மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 17 இலட்சத்து 95 ஆயிரமாகும். இதுவரை உலகளவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையுடன் மரணித்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது 5.94% வீதமாகும். இதுவே உலகளவில் ஏற்பட்ட மொத்த தொற்றுக்களுடன் மரணித்தவர்கள் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது 3.77% வீதமாகும். இந்த சதவீதம் இரு மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 5% வீதமாக இருந்து தற்போது குறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பல உரைகளில் இந்த வருட இறுதிக்குள் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கிடைப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்து வந்த உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் சமீபத்தில் இதுவரை கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. கண்டுபிடிக்கப் படாதும் போகலாம் என அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார். இவர் விரிவாகக் கூறும் போது, 'கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படக்கூடிய ஒரு முழுமையான தடுப்பூசியை நாம் உருவாக்க முடியாமலும் போகலாம், சில மாதங்களுக்கு மட்டுமே வைரஸில் இருந்து பாதுகாப்பு தரக்கூடுய தடுப்பூசிகளை மட்டுமே நாம் கண்டறியலாம். எவ்வாறாயினும், தடுப்பூசிகளுக்கான மனிதப் பரிசோதனை நடத்து முடிவதற்கு முன்பு நாம் எதையும் உறுதியாக கூற முடியாது' என்று தெரிவித்தார்.

உலகளவில் கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பல நாடுகள் நேர்மறையான தகவல்களை வெளியிட்டு வந்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை முடிந்து விட்டது என்றும், ஆக்டோபர் முதல் மனிதர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ரஷ்யா முதல் நாடாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

உலகளவில் ஒவ்வொரு வருடமும் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்கும் மெக்கா ஹஜ் யாத்திரையில் இம்முறை வெளிநாட்டுப் பயணிகள் யாரும் அனுமதிக்கப் படவில்லை. உள்ளூர் யாத்திரீகர்களும், சமூக இடைவெளியுடன் இந்த ஆண்டு ரமலான் பண்டிகையில் மெக்காவில் தொழுகை நடத்தியுள்ளனர். முகக் கவசம் அணிந்த நிலையில், அதிகபட்சமாக 50 பேர் கொண்ட குழுக்களாக மாத்திரமே இவர்கள் அனுமதிக்கப் பட்டனர்.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.