உலகம்

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஆபத்தான 2750 டன்கள் அமோனியம் நைட்ரேட் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 ஆயிரத்திற்கு அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்வதிவிடங்ககளை இழந்துள்ளதாகவும், பெய்ரூட்டின் பேரழிவு இதுவெனவும், நிவாரணளிப்பதற்கு உதவிகோரியுள்ளது யுனிசெப்.

இந்த வெடிவிபத்தின் தாக்கம் பெய்ரூட் நகரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீவுகளிலும் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவுமின்றி மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பல ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த பாரிய வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளதாக லெபானான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆதரவளிக்க விரும்புவோர் இணைப்பில் அழுத்தி பெய்ரூட் மக்களுக்கு ஆதரவளிக்கலாம்: https://www.unicef.ch/de/unsere-arbeit/nothilfe/nothilfefonds

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.