உலகம்

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை முதல், இந்த நடைமுறை அமுலுக்கு வரம் என நேற்று வியாழக்கிழமை நோர்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன்பிரகாரம் சுவிஸிலிருந்து நோர்வே செல்பவர்கள் குறைந்தது 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்டுவார்கள்.

சமீபத்திய நாட்களில் சுவிட்சர்லாந்தில் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன. நோய்தொற்று மட்டுப்படுத்தப்பட்ட பின் கடந்த வாரத்தில், முதல் தடவையாக எண்கள் ஒரு நாளைக்கு 200 ஐ நெருங்குகின்றன. இதன்காரணமாகவே ஏற்கனவே நோர்வே அறிவித்திருந்த நாடுகளின் பட்டியல்களில் சுவிட்சர்லாந்தைச் சேர்ப்பதோடு, ஸ்வீடனின் சில பகுதிகளுடன் பிரான்ஸ், மொனாக்கோ மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளிலிருந்தும் வருகை தரும் தனிமைப்படுத்தலினை சுவிஸ் பயணிகளுக்கும் அறிமுகம் செய்துள்ளது. பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகியவை ஏற்கனவே நோர்வேயின் 'சிவப்பு' தனிமைப்படுத்தலுக்கு பொருந்தக்கூடிய நாடுகளின் பட்டியலில் இருந்தன.

ஆகஸ்ட் 3 திங்கள் அன்று, ஜெனீவாவில் புதிய தொற்றுநோய்களின் எண்ணிக்கை கடந்த 14 நாட்களாக 100,000 குடியிருப்பாளர்களுக்கு 100 க்கும் அதிகமாக இருந்துள்ளது. இந்த குறி சுவிஸ் அரசாங்கத்தின் 100,000 க்கு 60 என்ற உயர் வகைப்பாட்டை விட அதிகமாக உள்ளது. இதனால் ஜெனிவா நோய் தொற்றுக் காட் ஸ்பாட்டாக மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.