உலகம்

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் தீவான மொரீஷியஸ் சுற்றுச்சூழல் அழிவின் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது.

2007 ஆம் ஆண்டில் 300 மீட்டர் (984 அடி) நீளத்துடன் மொத்த டன் 101,000 கொண்டதாக வகாஷியோ எனும் தாங்கி கப்பல் கட்டப்பட்டது. ஜப்பானிய நிறுவனத்தைச் சேர்ந்த இந்த எண்ணெய்த்தாங்கி கப்பல் ஜூலை 25 அன்று மொரீஷியஸ் தீவின் தென்கிழக்குப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து முழ்கியது. அதன் குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் அக்கடல் பிரதேசத்தின் கரடுமுரடான பாறைகளால் சிதைவுற்று அக்கப்பலின் மொத்த கேரியரிலிருந்து எண்ணெய் கசிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரீஷியஸ் தீவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் நாங்கள் பெறும் சுற்றுச்சூழல் நெருக்கடி நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

கரடுமுரடு பாறைகள் நிறைந்த கடலிருந்து அக் கப்பலை வெளியேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்க்கின்றனர். இதனால் கடல் நீரில் அக்கப்பலிருந்து பெருமளவிலான எரிபொருள் எண்ணெய் கசிந்து வருவதாக கூறப்படுகிறது.

"நாங்கள் இந்த வகையான பேரழிவை எதிர்கொள்வது இதுவே முதல் முறை, இந்த சிக்கலை கையாள எங்களுக்கு போதுமானதாக திறன் இல்லை." என அந்நாட்டு மீன்பிடி அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

நாளடைவில் கப்பல் உடைந்து விடக்கூடும் என்றும் இது இன்னும் பெரிய கசிவை ஏற்படுத்தி தீவின் கடற்கரையோரத்தில் பேரழிவு தரக்கூடிய சேதத்தை ஏற்படுத்தும் என்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரிஷியஸ் உலகப் புகழ்பெற்ற பவளப்பாறைகளின் தாயகமாக உள்ளது குறிப்பிடதக்கது. சுற்றுலாத்துறை என்பது நாட்டின் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

இந்தப் பெரும் சேதத்தால் ஆயிரக்கணக்கான விலங்கு இனங்கள் மாசுபடும் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. அத்தோடு மொரீஷியஸின் பொருளாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என்றும் கூறப்படுகிறது

இந்தப் கப்பல் - ஒரு ஜப்பானிய நிறுவனத்திற்கு சொந்தமானது. ஆனால் பனாமாவில் பதிவுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கப்பல் கடலில் விபத்துக்குள்ளானபோது 4,000 டன் எரிபொருள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

images : @hugoclement, BBC, TheGuardian

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.