உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 19 811 122
மொத்த இறப்புக்கள் : 729 653
குணமடைந்தவர்கள் : 12 725 906
ஆக்டிவ் தொற்றுக்கள் : 6 355 563
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 65 150

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 5 149 723 : மொத்த இறப்புக்கள் : 165 070
பிரேசில் : 3 013 369 : 100 543
இந்தியா : 2 156 169 : 43 484
ரஷ்யா : 882 344 : 14 854
தென்னாப்பிரிக்கா : 553 188 : 10 210
மெக்ஸிக்கோ : 475 902 : 52 006
பெரு : 471 012 : 20 844
ஸ்பெயின் : 361 442 : 28 503
ஈரான் : 324 692 : 18 264
பிரிட்டன் : 309 763 : 46 566
சவுதி அரேபியா : 287 262 : 3130
பாகிஸ்தான் : 284 121 : 6082
இத்தாலி : 250 103 : 35 203
ஜேர்மனி : 216 896 : 9261
பிரான்ஸ் : 197 921 : 30 324
கனடா : 119 221 : 8976
சீனா : 84 619 : 4634
சுவிட்சர்லாந்து : 36 451 : 1986
இலங்கை : 2841 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளாவிய அடிப்படையில் மொத்த தொற்றுக்கள் 1 கோடியே 98 இலட்சத்தைக் கடந்துள்ளது. நாளைய தினம் இது 2 கோடியைக் கடக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

உலகளாவிய அடிப்படையில், மொத்த இறப்புக்கள் 7 இலட்சத்து 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நாடுகளின் அடிப்படையில் பார்த்தால் பிரேசிலில் மொத்த இறப்புக்கள் 1 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் 1 இலட்சம் இறப்புக்களைக் கடந்த 2 ஆவது நாடாக பிரேசில் மாறியுள்ளது.

உலகில் கோவிட்-19 இனால் பாதிக்கப் பட்டுள்ள பொது மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தினை ஆக்டோபரில் வழங்கவிருப்பதாக முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருந்தது. தற்போது இஸ்ரேலும் மிகுந்த நண்மை தரக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இத்தகவலை இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதிப் படுத்தியுள்ளார். மேலும் இந்தத் தடுப்பூசி மனிதர்களிடம் விரைவில் பரிசோதிக்கப் படும் எனவும் இஸ்ரேலின் இராணுவ அமைச்சர் பென்னி காண்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு எதிராக ஒரு வலிமையான தடுப்பு மருந்து கிடைத்தால், அது பாரபட்சமின்றி உலகின் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்றும் அப்போது தான் உலகெங்கும் வாழ்வாதார மற்றும் பொருளாதார மீட்சி விரைந்து ஏற்படும் என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்றில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறிந்து கொள்ளப் பின்வரும் இணைப்பைத் தொடருங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.