உலகம்

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.

இவ்வாறான நிலையில் மாணவர்கள் முகமூடி அணிய வேண்டுமா? இல்லையா?, எந்த மாநிலங்கள் அதனைக் கட்டாயமாக்கியுள்ளன எனும் குழப்பங்கள் பெற்றோர்கள் மத்தியில் காணப்படுகிறது.

ஜேர்மன் மொழி பேசும் ஆர்காவ், அப்பென்செல்லர், பாஸல், கிளாறஸ், செங்காளன், ஸப்ஹவுஸன், ஓபால்ட், சோலோத்தூர்ன், ஸ்விஸ், துர்காவ் மற்றும் பேர்னின் ஜெர்மன் மொழிப் பகுதிகளில் இந்த வாரம் பொதுப் பள்ளி மீண்டும் தொடங்குகிறது.

முகமூடி அல்லது முககவசம் அணிவது தொடர்பான கொள்கைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடும். ஆனால் அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், எல்லா மாநிலங்களிலும், ஆரம்ப பள்ளிகளுக்கு முககவசங்கள் தேவையில்லை. இது பெரும்பாலான பிராந்தியங்களில் மழலையர் பள்ளி முதல் ஆறாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கோவிட் -19 ஆல் சிறு குழந்தைகள் அரிதாகவே பாதிக்கப்படுவார்கள் என்று சுவிஸ் சுகாதார அதிகாரிகள் நம்புகிறார்கள் என்பதனால் இது கட்டாயமாக்கப்படவில்லை. இதேவேளை, இடைநிலை மற்றும் தொழிற்கல்வி பள்ளிகளில் ஸப்1வுசனுக்கு மட்டுமே மேல்நிலைப் பள்ளிகளில் பொதுவான முகமூடி தேவை உள்ளது. மற்றைய பெரும்பாலான மாநிலங்களில், மாணவர்கள் சில சூழ்நிலைகளில் மட்டுமே முகமூடிகளை அணிய வேண்டியிருக்கும். குறிப்பாக 1.5 மீட்டர் தூர விதியைக் கடைப்பிடிக்க முடியாதபோது. முகமூடி தேவையாக இருக்கும். ஆனால் இது ஆர்காவ் மாநிலத்தில் வகுப்பறையில் ஒரு நபருக்கு 2.25 மீட்டருக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே முகமூடிகள் அவசியம் என வலியுறுத்தப்படுகின்றது.

மாலங்களில் ஒரே மாதிரியான முகமூடி கொள்கைகள் இல்லாதது குறித்து சுவிஸ் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் டக்மார் ரோஸ்லர், எஸ்.ஆர்.எஃப் தொலைக்காட்சிக்கு தொலைதூர விதிகளை நடைமுறைப்படுத்துவது கடினம் என்பதால், பாதுகாப்பு முகமூடிகள் தேவை எனவும், குறிப்பாக நெரிசலான வகுப்பறைகளில் அது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

"ஒரு பாதுகாப்பு முகமூடியைக் கொண்டிருப்பதனால் வரக்கூடிய நன்மைகள், அதனை அணிவதனால் ஏற்படும் சிரமங்களை விட அதிகமாக இருக்கும்" என சுவிஸ் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவரான லூசியஸ் ஹார்ட்மேன் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் சொல்கையில், "கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மற்ற செலவுகளுடன் ஒப்பிடும்போது, ​​இது ஒப்பீட்டளவில் மலிவானதாக இருக்கும்" என்றும் கூறினார்.

பாஸல்-நாடு மாநிலப் பள்ளிகள் முகமூடிகளை இலவசமாக மாநில அரசு வழங்குகின்றது. ஆனால் ஸப்ஹவுசனில், மாணவர்கள் முகமூடிகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.