உலகம்

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

லெபனான் நாட்டு தலைநகர் பெய்ரூட்டில் கடந்த செவ்வாய் அன்று ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிப்பு பேரழிவில் 200 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என பெய்ரூட் ஆளுநர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் நூற்றுக்கணக்கானவர்களை இன்னும் காணவில்லை, அவர்களில் பலர் புலம்பெயர் தொழிலாளர்கள் எனகுறிப்பிட்டார்.

வெடிவிபத்தால் ஏற்பட்ட பேரழிவிற்கு பின்னர் அந்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இப்போராட்டங்களின் போது பொலிசார் மற்றும் போராட்டாளர்கள் இடையே மோதல் அதிகரித்தமையால் நேற்றையதினம் பெய்ரூட் நகரில் வன்முறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே அந்நாட்டின் மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பல எம்.பி.க்களின் பதவி விலகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. நெருக்கடி குறித்து விவாதிக்க பிரதமர் ஹசன் டயப் அழைத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக நிதியமைச்சர் காசி வாஸ்னியும் விலகத் தயாராகி வருவதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் இவ் வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 110 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில்காணாமல் போனவர்களில் பலர் புலம்பெயர் தொழிலாளர்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், உயிர் பிழைத்தவர்கள் யாரும் இதுவரை கண்டுபிடிக்கப்படாமையால்; லெபனான் இராணுவம், துறைமுகத்தில் தேடுதல் நடவடிக்கையின் மீட்பு கட்டத்தை நிறுத்துவதாகக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெய்ரூட் நகரத்தின் பிற இடங்களில், நூறாயிரக்கணக்கான மக்கள் கடுமையாக சேதமடைந்த ஜன்னல்கள், கதவுகள் அன்ற வீடுகளில் உள்ளதாகவும்; மேலும் பலர் தங்கள் வீடுகளை இழந்தநிலையில் உதவியற்று நிற்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெய்ரூட்டின் துறைமுகத்தில் ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததன் விளைவாக இந்த அபாயகரமான வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது குறிப்பிடதக்கது. நகர மையத்திற்கு அருகிலுள்ள ஒரு கிடங்கில் இவ்வளவு அபாயகரமான பொருட்களை வைத்திருந்தமை பல லெபனானியர்களால் அவநம்பிக்கையை சந்தித்துள்ளது. மேலும் அவர்கள் நீண்டகாலமாக உள்ள அரசியல் உயரடுக்கின் ஊழல், புறக்கணிப்பு மற்றும் தவறான நிர்வாகம் ஆகியவற்றை குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆதரவளிக்க விரும்புவோர் இணைப்பில் அழுத்தி பெய்ரூட் மக்களுக்கு ஆதரவளிக்கலாம்: unicef.ch

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.