உலகம்

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.

பெய்ரூட் வெடி விபத்தில் 160 இற்கும் அதிகமானவர்கள் பலியாகியும், 6000 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தும் உள்ளதுடன், சுமார் 3000 பேர் வீடுகளையும், வணிக வளாகங்களையும் இழந்தும் உள்ளனர்.

பல வருடங்களாக ஊழல், நிர்வாக சீர்கேடு மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற பல பிரச்சினைகளை சந்தித்து வந்த லெபனானில், பெய்ரூட் வெடிவிபத்து சம்பவம் மக்கள் புரட்சியைத் தூண்டி விட்டுள்ளது. 2018 ஆமாண்டு தேர்தலில் பிரதமராக வந்த சாத் ஹரிரி மக்கள் புரட்சியால் ஆக்டோபரில் பதவி விலக ஜனவரி மாதம் லெபனான் பிரதமராக பதவி ஏற்றவர் தான் ஹசன் தியாப். ஆனால் பெய்ரூட் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் முன்னால் பேராசிரியரான அவரது ஆட்சியிலும் ஊழல் நிலமை மாறவில்லை.

இதனால் தான் சிறியளவில் நடந்து வந்த போராட்டங்கள், பெய்ரூட் சம்பத்தின் பின் புரட்சியாக வெடித்துள்ளது. இந்தப் புரட்சியாளர்களில் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், பிரதமர், அமைச்சரவை மாத்திரமன்றி லெபனான் அதிபர் மற்றும் சபாநாயகர் பதவி விலகும் வரை தமது போராட்டம் தொடரும் என ஆவேசமாகக் கூறியுள்ளார்.

ஏற்கனவே கடும் கடன் சுமையில் சிக்கியிருக்கும் லெபனானில் பண மதிப்பும் 80% வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே அங்கு ஆட்சி மாற்றம் அவசியமில்லை. அரசியல் மாற்றம் தான் தேவை எனக் கூறுகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லெபனான் மக்கள்.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.