உலகம்

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

சுமார் 267 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்நாட்டில் சுமாத்திரா தீவில் அமைந்துள்ள சினாபங்க் உயிர் எரிமலை செவ்வாய்க்கிழமை முதல் வெடித்துச் சீறத் தொடங்கியுள்ளது.

இந்த எரிமலையில் இருந்து 5000 அடிக்கு கரும் சாம்பல் புகை வெளியேறி வரும் நிலையில், இதற்கு அருகே 5 கிலோமீட்டர் தொலைவு வரையிருக்கும் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என இந்தோனேசிய அரசு அறிவுறுத்தி இவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை ஆரம்பித்துள்ளது. இதுவரை இந்த எரிமலை வெடிப்பால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் இனிவரும் நாட்களில் இதன் சீற்றம் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்க பட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே எரிமலை சீற்றம் காரணமாக இந்தப் பகுதியில் இருந்து இதுவரை 30 000 பேருக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.