உலகம்

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "சுவிற்சர்லாந்தில் தொற்றுநோயின் நிலைமை மோசமடையாமல் பார்த்துக் கொள்ள அரசாங்கம் விரும்புகிறது. 1,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கான நிகழ்வுகளுக்கான தடை ஆகஸ்ட் 31 ஆம் திகதியுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போதுள்ள நோய் தொற்றுப் பரவல; நிலைமைகளின் அடிப்படையில் இந்தத் தடையினை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஆயினும் அரசு மிகக் கவனமாக சமூகத்தின் தேவைகளையும் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கலாச்சார இடங்களின் பொருளாதார நலன்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, மீண்டும் திறக்கும் நடவடிக்கையாக எதிர்வரும் அக்டோபர் முதலாந் திகதி முதல் பெரிய கூட்டங்கள் நிகழ்வுகளுக்கான அனுமதி, சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.

சுவிற்சர்லாந்து சில ஐரோப்பிய அண்டை நாடுகளைப் போலல்லாமல், மார்ச் நடுப்பகுதியில் புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது. ஆயினும் ஏப்ரல் 27 முதல் படிப்படியாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.