உலகம்

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட உலகளாவிய அமைப்புக்கள் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.

பல உலக நாடுகள் ரஷ்யாவின் தடுப்பு மருந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிலையில் பிலிப்பைன்ஸ் அதிபர் தன்னையே இந்த மருந்து சோதானைக்கு உட்படுத்தத் தயார் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இறப்புக்கள் அடிப்படையில் இந்தியா, பிரிட்டனை பின்னுக்குத் தள்ளிவிட்டு 47 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களுடன் உலகளவில் 3 ஆம் இடத்துக்கு வந்துள்ளது. இன்றைய நிலையில், கடந்த ஒரே நாளில் உலகம் முழுதும் 2 இலட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 6634 இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Worldometer இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 20 876 201
மொத்த இறப்புக்கள் : 748 392
குணமடைந்தவர்கள் : 13 767 526
ஆக்டிவ் தொற்றுக்கள் : 6 360 283
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 64 550

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 5 363 373 : மொத்த இறப்புக்கள் : 169 181
பிரேசில் : 3 170 474 : 104 263
இந்தியா : 2 429 738 : 47 488
ரஷ்யா : 907 758 : 15 384
தென்னாப்பிரிக்கா : 568 919 : 11 010
பெரு : 498 555 : 21 713
மெக்ஸிக்கோ : 498 380 : 54 666
கொலம்பியா : 422 519 : 13 837
சிலி : 378 168 : 10 205
ஸ்பெயின் : 376 864 : 28 579
ஈரான் : 336 224 : 19 162
பிரிட்டன் : 313 798 : 41 329
சவுதி அரேபியா : 294 519 : 3303
பாகிஸ்தான் : 286 674 : 6139
பங்களாதேஷ் : 269 115 : 3557
இத்தாலி : 251 713 : 35 225
ஜேர்மனி : 221 413 : 9276
பிரான்ஸ் : 206 696 : 30 371
கனடா : 120 844 : 9006
சீனா : 84 756 : 4634
சுவிட்சர்லாந்து : 37 403 : 1991
இலங்கை : 2882 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 2 கோடியே 8 இலட்சத்து 76 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 7 இலட்சத்து 48 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன.

கோவிட்-19 தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைத் தொடருங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

http://www.4tamilmedia.com/knowledge/essays/17690-who-faq-on-covid-19-part-5

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.