உலகம்

சுவிற்சர்லாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 528 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக மத்திய கூட்டாட்சி சுகாதாரத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. இதில் 13 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.

இது இவ்வாறிருக்க, சுவிற்சர்லாந்தின் அன்டை நாடுகளில் ஒன்றான பிரான்சில் அதிக எண்ணிக்கையிலான வைரஸ் நோய்த் தொற்றுகள் இருப்பதால், அங்கிருந்து வரும் வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமா என சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு இன்று விவாதிக்கின்றது.

சுவிற்சர்லாந்தின் 100,000 மக்களுக்கு 60 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் வரம்பின் படி மதிப்பீடு செய்யின், பிரான்சில், இந்த எண்ணிக்கை தற்போது 139 ஆக, அதாவது இருமட்ங்கிலும் அதிகமாக உள்ளதனால் இந்த யோசனை ஆலோசிக்கப்படுவதாகவும் தெரிய வருகிறது.

சுவிஸின் சுகாதார மந்திரி அலைன் பெர்செட்டின் இந்த முன்மொழிவு பிரெஞ்சு எல்லைப் பகுதிகளில், எல்லை தாண்டிய ஊழியர்களைச் சார்ந்திருக்கும் சுவிஸ் பிராந்தியங்களான, ஜெனீவா, வாட், பாஸல் மற்றும் ஜூரா ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்படலாம். குறிப்பாக 125, 000 க்கும் மேற்பட்ட எல்லைப்புற தொழிலாளர்களை பெரிதும் நம்பியுள்ள ஜெனீவா பகுதி மிகவும் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில், நகரத்தின் சுகாதார ஊழியர்களில் 60 சதவீதம் பேர் பிரான்சில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க சுகாதார அமைச்சரின் பிராந்திய இடர் மதிப்பீடுகளுக்கான இந்தக் கோரிக்கை பிரான்ஸை மட்டுமன்றி, தேவைப்பட்டால், அனைத்து அண்டை நாடுகளான இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவுக்கும் பொருந்தும் எனவும் கூறப்படுகிறது. எல்லை தாண்டிய தொழிலாளர்களை அதிகம் நம்பியுள்ள தொழில்கள் மற்றும் பிராந்தியங்கள் இந்த யோசனையால் பாதிப்படையுமா என்ற கேள்விக்கு அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை எனச் சொல்லப்படுகிறது. ஏனெனில் கோவிட் -19 தொற்றுநோயின் உயரத்தின் போது கூட, எல்லை தாண்டிய தொழிலாளர்கள் நுழைவு கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு பெற்றிருந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.