உலகம்

செப்டம்பர் 14ந் திகதி திங்கட் கிழமை முதல், பிரான்சின் ஒன்பது பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் சுவிற்சர்லாந்திற்கு வந்ததும், 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டியிருக்கும்.

நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில், சுவிஸ் சுகாதார மந்திரி அலைன் பெர்செட் இதனை உறுதி செய்தார். பிரெஞ்சு பிராந்தியங்களான Centre-Val de Loire, Hauts-de-France, Île de France, Normandy, Nouvelle-Aquitaine, Occitanie, Pays de la Loire, and Provence-Alpes-Côte d’Azur ஆகிய பிராந்தியங்களிலிருந்து சுவிஸ் வரும் பயணிகள் 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பாரிஸ் உட்பட 13 பிரெஞ்சு பிராந்தியங்களில் ஒன்பது இடங்களையும், கோர்சிகா தீவு மற்றும் அண்டை நாடான ஆஸ்திரியாவில் வியன்னாவையும் இந்த ஆபத்துப் பட்டியலில் வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

"பிரான்சில் ஏற்கனவே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் இருந்த தொற்றுக்களின் எண்ணிக்கையை விட இப்போது அதிகமாக உள்ளன என்பதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை. சுவிற்சர்லாந்தில் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. நாங்கள் தொற்றுநோய் பரவலைத் தக்க வைக்க முயற்சிக்கிறோம்" என பெர்செட் மேலும் தெரிவித்தார்.

சுவிற்சர்லாந்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு : மீண்டும் எல்லைக் கட்டுபாடுகளை அதிகரிக்க ஆலோசனை ?

இதே நேரத்தில், அரசாங்கம் ஒரு "நடைமுறை" அணுகுமுறையை நாடியுள்ளதாகவும், இதனால் பிரான்ஸ் மற்றும் பிற அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூர் பொருளாதாரங்கள் எல்லை தாண்டிய தொழிலாளர்களைச் சார்ந்து இருப்பதால், சுவிற்சர்லாந்தின் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவின் எல்லையிலுள்ள பகுதிகள் பட்டியலில் சேர்க்கப்படாது என்று பெர்செட் கூறினார்.

இது இவ்வாறிருக்க, சுவிற்சர்லாந்தில் வைரஸ் தொற்றுத் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுவது தொடர்பில், மத்திய கூட்டாட்சி சுகாதாரத்துறை (FOPH) பிரிவுத் தலைவர் ஸ்டீபன் கஸ்டர் கருத்துத் தெரிவிக்கையில், சுவிற்சர்லாந்தில் வைரஸ் தொற்று அபாய நிலையினை எட்டவில்லை. இன்னமும் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. தொற்று வீதம் அதிகமாகக் காணப்படுவதற்குக் காரணம், அதிகளவு பரிசோதனைகள் நடைபெறுவதே எனவும் தெரிவித்தார்.

" சுவிற்சர்லாந்தில் புதிய வைரஸ் தொற்று எண்ணிக்கை இன்னமும் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இது குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் எப்போதும் நாம் அனைவரும் அதற்கான முன் பாதுகாப்புக்களுடன் இருப்பது மிக மிக அவசியம் " என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.<

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.