உலகம்

2021 ஆமாண்டு இறுதிவரை கோவிட்-19 தொற்று அச்சுறுத்தல் நீடிக்கும் என அமெரிக்க தொற்று நோயியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமெரிக்க தொற்று நோய் நிபுணர் அந்தோனி பாவுசி, 'அமெரிக்காவில் தற்போது சராசரியாக 40 000 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியும், சராசரியாக 1000 பேர் இறந்தும் வருகின்றனர்.

இத்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக அதிபர் டிரம்பின் கூற்றை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் தீவிர அச்சுறுத்தல் 2021 இறுதி வரை நீடிக்கும். தற்போது இருந்து வரும் புள்ளிவிபரங்கள் கவலைக்குரியதாக இருக்கும் நிலையில், அமெரிக்கா இயல்பு நிலைக்குத் திரும்புவது குறித்து 2021 இறுதியில் தான் உறுதியாகப் பேசும் நிலை உருவாகலாம்.' என்றுள்ளார். கோவிட்-19 பெரும் தொற்று உலகம் எதிர்கொண்ட மிகப்பெரிய வரலாற்றுச் சவால்களில் ஒன்று என ஏற்கனவே ஐ.நா பொதுச் சபை தெரிவித்திருந்தது.

சமீபத்தில் பிரிட்டன் தயாரித்து வந்த தடுப்பூசி ஒன்று செலுத்தப் பட்ட ஒருவருக்கு அது தீவிர விளைவுகளை ஏற்படுத்தியதால் இப்பரிசோதனை உடனடியாக நிறுத்தப் பட்டிருந்தது. இந்நிலையில் பிரிட்டனின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிக்கு ஏற்ப ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், ஆஸ்ட்ரா ஜெனீகா நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் கோவிட்-19 தடுப்பூசி பரிசோதனை மீண்டும் ஆரம்பிக்கப் பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.

இந்த ஆய்வில் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற நிறுவனமும் இணைந்து செயற்படுவது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் ரஷ்யா உலகின் முதல் நாடாகத் தயாரித்திருந்த ஸ்புட்னிக் 5 என்ற கொரோனா தடுப்பு மருந்தை பொது மக்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 28 956 415
மொத்த இறப்புக்கள் : 924 793
குணமடைந்தவர்கள் : 20 837 327
ஆக்டிவ் தொற்றுக்கள் : 7 194 295
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 60 855

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 6 676 601 : மொத்த இறப்புக்கள் : 198 128
இந்தியா : 4 754 356 : 78 614
பிரேசில் : 4 315 858 : 131 274
ரஷ்யா : 1 062 811 : 18 578
பெரு : 722 832 : 30 593
கொலம்பியா : 708 964 : 22 734
மெக்ஸிக்கோ : 663 973 : 70 604
தென்னாப்பிரிக்கா : 648 214 : 15 427
ஸ்பெயின் : 576 697 : 29 747
ஆர்ஜெண்டினா : 546 481 : 11 263
சிலி : 432 666 : 11 895
ஈரான் : 399 940 : 23 029
பிரான்ஸ் : 373 911 : 30 910
பிரிட்டன் : 365 174 : 41 623
பங்களாதேஷ் : 336 044 : 4702
சவுதி அரேபியா : 325 050 : 4240
பாகிஸ்தான் : 301 481 : 6379
துருக்கி : 289 635 : 6999
ஈராக் : 286 778 : 7941
இத்தாலி : 286 297 : 35 603
பிலிப்பைன்ஸ் : 261 216 : 4371
ஜேர்மனி : 260 546 : 9427
கனடா : 136 141 : 9170
சீனா : 85 184 : 4634
சுவிட்சர்லாந்து : 46 704 : 2020
இலங்கை : 3195 : 12

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளாவிய அடிப்படையில் மொத்த தொற்றுக்கள் 2 கோடியே 89 இலட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 9 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. அமெரிக்காவில் இன்னும் இரு தினங்களுக்குள் மொத்த இறப்புக்கள் உலகிலேயே மிக அதிகபட்சமாக 2 இலட்சத்தை எட்டி விடும் என்று கூற முடியும்.

சுவிட்சர்லாந்தின் புள்ளிவிபரங்கள் சமீப காலமாக அங்கு தொற்றுக்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டுகின்றது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.