உலகம்

கட்டார் தலைநகர் டோஹாவில் சனிக்கிழமை ஆப்கான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்பு 2001 ஆக்டோபரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து அங்கு ஆட்சியில் இருந்த தலிபான்களை வெளியேற்றி ஜனநாயக ஆட்சி கொண்டு வரப்பட்டது.

ஆனால் தலிபான்களை முற்றாக ஒழிக்க இயலாத காரணத்தால் அவர்கள் அடிக்கடி மோசமான தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தி ஆப்கானில் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். அவ்வப்போது அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் அவை குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றத்தையுய் ஏற்படுத்தவில்லை. இந்த உள்நாட்டுப் போரில் ஆப்கான் அரசுக்கு சார்பாக செயற்பட்டு வந்த அமெரிக்க இராணுவம் சமீப காலமாக நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதன் விளைவாக பெப்ரவரி இறுதியில் தலிபான்களுக்கும், அமெரிக்க இராணுவத்துக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தம் ஆப்கான் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க உந்துகோலாக அமைந்தது. ஆனால் தலிபான் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக இப்பேச்சுவார்த்தையை பின்னுக்குத் தள்ளி வந்தது.
எனினும் தற்போது இதில் ஒரு சுமுக இணக்கம் ஏற்பட்டு இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை டோஹாவில் தொடங்கியுள்ளது.

21 ஆப்கான் அரச பிரதிநிதிகள் தலிபான் பிரதிநிதிகளுடன் நடத்தி வரும் இப்பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பேயோவும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.