உலகம்

பெலாரூஸ் நாட்டில் அண்மைக் காலமாக அதன் அரசும், அதிபரும் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக சனிக்கிழமை பெலாருஸ் தலைநகர் மின்ஸ்க்கில் சுமார் 10 000 பெண்கள் அதிபருக்கு எதிரான பதாதைகளுடனும், கோஷங்களுடனும் அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.

சுமார் 9.5 மில்லியன் மக்களைக் கொண்டுள்ள முன்னால் சோவியத் யூனியனைச் சேர்ந்த நாடாக இருந்த பெலாருஸில் புதிய தேர்தலை வலியுறுத்தி வரும் கூட்டு எதிர்க்கட்சி கவுன்சிலின் தலைவரான மரியா கொலெஸ்னிகோவா என்பவருக்கு ஆதரவாகவும் அவரின் உருவப் படங்களை இந்த அணிவகுப்பின் போது இப்பெண்கள் ஏந்திச் சென்றனர்.

இதற்கு முன்பு நடந்த போராட்டங்களின் போது மரியா கொலெஸ்னிகோவா இனை நாட்டை விட்டு வெளியேற்ற முயன்ற பெலாருஸ் போலிசார் அது முடியாத காரணத்தினால் இவ்வாரம் அவரை சிறையில் அடைத்தனர். மரியாவின் வழக்கறிஞர் இது குறித்துக் கூறும் போது உக்ரைன் எல்லையின் ஊடாக இவரை வலுக்கட்டாயமாக போலிசார் வெளியேற்ற முயன்ற போது அவர் தனது கடவுச் சீட்டை எரித்து விட்டு பெலாருஸை விட்டு வெளியேற மறுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் 80% வீத ஆதரவுடன் 6 ஆவது முறையாகவும் பெலாருஸில் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷெங்கோ அதிபராக முயன்ற போதும், தேர்தலில் முறைகேடு அப்பட்டமாக நடந்ததாகத் தெரிவித்து பெலாருஸில் ஆகஸ்ட் 9 ஆம் திகதி மக்கள் போராட்டம் வெடித்தது. தனது அமைச்சரவைக் கவுன்சிலில் உள்ள உறுப்பினர்கள் பலர் இப்போராட்டங்களை அடுத்து பதவி நீக்கம் செய்யப் பட்டோ, நாட்டை விட்டு வெளியேறியோ இருந்த போதும் அதிபர் லுகாஷெங்கோ அவர்களுடன் பேச மறுத்து விட்டார்.

அதிபர் தேர்தல் முறைகேடுகளை சில தேர்தல் அதிகாரிகளே ஒப்புக் கொண்டிருந்த நிலையில் பெலாருஸில் வெடித்த மக்கள் போராட்டத்தில் 7000 பேருக்கும் அதிகமான மக்கள் கைதும் செய்யப் பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து 26 ஆவது ஆண்டாக பெலாருஸ் அதிபராக லுகாஷெங்கோ நீடிப்பதை அந்நாட்டு மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் விரும்பவில்லை.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் தலைநகர் மின்ஸ்க்கில் கிட்டத்தட்ட 100 000 இற்கும் அதிகமான போராட்டக் காரர்கள் கூடியுள்ளனர். திங்கட்கிழமை பெலாருஸ் அதிபர் லுகாஷெங்கோ ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கவிருப்பதாகவும், பெலாருஸில் வன்முறை அதிகமானால் ரஷ்யப் போலிசாரை அங்கு அனுப்புவது தொடர்பில் புதின் ஆலோசனை தெரிவித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இதனால் பெலாருஸ் மக்கள் புரட்சியை சாதகமாகக் கொண்டு அந்நாட்டைத் தன்னுடன் ரஷ்யா இணைக்க முயற்சிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் கணிப்புக்கள் வெளியாகி உள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.