உலகம்

உலகளவில் தற்போது நம்பிக்கையளிக்கக் கூடிய சுமார் 35 வகையான கொரோனா தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இவற்றில் 8 தடுப்பூசிகளின் பரிசோதனை இந்தியாவில் நிகழ்த்தப் பட்டு வருகின்றது. முதல் நாடாக ரஷ்யா கண்டு பிடித்திருந்த ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசியின் முதல் 2 கட்ட சோதனைகளின் போது தன்னார்வலர்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து 3 ஆம் கட்ட சோதனை முழுவதும் முடியும் முன்பே இந்தத் தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துப் பொது மக்களுக்கு வழங்கத் தொடங்கியது சர்வதேசம் மற்றும் மருத்துவத் துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் இராணுவ மருத்துவப் பிரிவு, தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து Ad-5 - nCoV என்ற தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. இதற்குக் காப்புரிமையும், கொரோனாவேக் என்ற இன்னொரு தடுப்பூசிக்கும் குறைந்த பட்ச அளவில் பயன்படுத்திக் கொள்ள அனுமதியினையும் சீன அரசு அளித்துள்ளது.

அமெரிக்காவில் அரச உதவியுடன் தயாரிக்கப் பட்டு வந்த mRna-1273 என்ற தடுப்பூசி ஜூலை 27 ஆம் திகதியளவில் 3 ஆம் கட்ட சோதனையைத் தொடங்கியது. இந்த மருந்தினை 10 கோடி டோஸ்களுக்குத் தயாரிக்க தனியார் நிறுவனம் ஒன்றுடன் அதிபர் டிரம்ப் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இந்தத் தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் கிடைத்தால் அதனை உடனே ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 12 கோடி டோஸ்கள் ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

மறுபுறம் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தயாரித்து வரும் AZD 1222 என்ற தடுப்பு மருந்தின் 2 கட்ட சோதனைகளும் சிறப்பான விளைவுகளைத் தந்திருக்கும் நிலையில் இதற்கு அங்கீகாரம் கிடைத்தால், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா என்ற இந்திய மருந்து நிறுவனத்துடன் இணைந்து உலகிலேயே மிக அதிகபட்சமாக 150 கோடி டோஸ் மருந்துகளைத் தயாரிக்கவும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

உலகளவில் இறுதிக் கட்ட சோதனையை நெருங்கியுள்ள 35 கொரோனா தடுப்பு மருந்து சோதனைகளில் 8 இந்தியாவில் சோதனையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 29 189 903
மொத்த இறப்புக்கள் : 928 340
குணமடைந்தவர்கள் : 21 031 773
ஆக்டிவ் தொற்றுக்கள் : 7 229 790
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 60 511

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 6 708 458 : மொத்த இறப்புக்கள் : 198 520
இந்தியா : 4 846 427 : 79 754
பிரேசில் : 4 330 455 : 131 663
ரஷ்யா : 1 062 811 : 18 578
பெரு : 729 619 : 30 710
கொலம்பியா : 716 319 : 22 924
மெக்ஸிக்கோ : 668 381 : 70 821
தென்னாப்பிரிக்கா : 649 793 : 15 447
ஸ்பெயின் : 576 697 : 29 747
ஆர்ஜெண்டினா : 555 537 : 11 352
சிலி : 434 748 : 11 949
ஈரான் : 402 029 : 23 157
பிரான்ஸ் : 381 094 : 30 916
பிரிட்டன் : 368 504 : 41 628
பங்களாதேஷ் : 337 520 : 4733
சவுதி அரேபியா : 325 651 : 4268
பாகிஸ்தான் : 302 020 : 6383
துருக்கி : 291 162 : 7056
ஈராக் : 290 309 : 8014
இத்தாலி : 287 753 : 35 610
ஜேர்மனி : 261 298 : 9428
பிலிப்பைன்ஸ் : 261 298 : 4371
கனடா : 136 659 : 9171
சீனா : 85 194 : 4634
சுவிட்சர்லாந்து : 47 179 : 2021
இலங்கை : 3234 : 12

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளாவிய அடிப்படையில், மொத்த தொற்றுக்கள் 2 கோடியே 91 இலட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 9 இலட்சத்து 28 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. உலகளாவிய தொற்றுக்கள் இன்னும் சில தினங்களுக்குள் 3 கோடியை எட்டி விடவும், உலகளாவிய இறப்புக்கள் 10 இலட்சம் அதாவது 1 மில்லியனை எட்டி விடவும் அதிக வாய்ப்புக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும், எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியத் திரைவானில் சுமார் 40 ஆயிரம் பாடல்களைப் பாடிய சாதனைச் சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அமைதியுற்றார்.

7 மாநில முதல் மந்திரிகளுடனான கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.