உலகம்

மேற்கு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையாகப் பரவி வரும் காட்டுத் தீக்கு அங்கு 35 பேர் பலியாகி இருப்பதுடன், 30 இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியும், 4000 இற்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தும் உள்ளன.

கடுமையான காட்டுத் தீ சுவாலை மற்றும் சாம்பலால் அங்கு பகல் இரவு போல் காட்சியளிக்கின்றது.

மேலும் கலிபோர்னியாவின் வெப்பநிலையும் மிக அதிகளவில் உயர்ந்து மக்களை வாட்டுகின்றது. மின்சார இணைப்பு துண்டிப்பால் 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். கலிபோர்னிய காட்டுத் தீ அருகேயுள்ள ஒரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களுக்கும் தற்போது பரவியுள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் சுமார் 16 000 இற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். ஒரேகான் மாகாணத்தில் 5 சிறிய நகரங்கள் அழிந்துள்ளதுடன் 40 000 மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மேலும் அங்கு வளி மாசடைவும் அதிகமாகவுள்ளது.

இதேவேளை சமீப நாட்களாக நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் வரை உயிரிழ்ந்துள்ளனர். மேலும் சிந்துபல்காக் மாவட்டத்தில் கடும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் பாகிஸ்தானில் ஜூன் இறுதி முதல் பெய்து வரும் பருவ மழை காரணமாக ஏற்பட்டு வந்துள்ள வெவ்வேறு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 300 இற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகள் : 

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வானார்!

உலகளவில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பு தொடர்பான சமீபத்திய நிலவரம்!

பெலாருஸ் அதிபர் பதவி விலகக் கோரி தலைநகரில் 10 000 பெண்கள் அணிவகுப்பு

இந்தியாவின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்

நாடு சமஷ்டி ஆட்சி முறையை நோக்கி செல்ல வேண்டும்: அநுரகுமார திசாநாயக்க

அலையோடு விளையாடும் பிகில் காயத்ரி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரேயா!

நகைச்சுவை அரசனுக்கு வயது 60!

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.