உலகம்

ஜப்பானின் வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாக 4 தடவைகள் பிரதமராக சேவையாற்றி இருந்த ஷின்சோ அபே சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாகப் பதவி விலகப் போவதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று திங்கட்கிழமை ஜப்பானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜப்பானின் கேபினட் செயலாளரும், முன்னால் பிரதமர் அபேயின் வலது கையாக செயற்பட்டவருமான யோஷிஹிடே சுகா என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் அதிபராகத் தேர்வானதும் அபேயின் அதே அரசியல் கொள்கைகளுடன் ஜப்பானை வழிநடத்திச் செல்வேன் என உறுதியளித்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மூவரிலும், சுகா 377 வாக்குகளையும், கிஷிடா 89 வாக்குகளையும், இஷிபா 68 வாக்குகளையும் பெற்றனர். இதனால் மிக அதிகளவு அறுதிப் பெரும்பான்மையுடன் சுகா வெற்றியீட்டியுள்ளார்.

வெற்றி பெற்ற பின் ஆற்றிய உரையில், முன்னால் பிரதமர் அபேயின் அதே வழியில் இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பெரும் தொற்றில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொண்டு பாதுகாப்பான உறுதியான வாழ்வை மக்கள் வாழ சேவையாற்றுவேன் என்றும் சுகா தெரிவித்துள்ளார்.

மேலும் ஜப்பானைத் தொடர்ந்து நவம்பரில் அமெரிக்காவும் அதிபர் தேர்தலை நடத்தவுள்ள நிலையில், அமெரிக்காவுடனான நல்லுறவு, கிழக்கு சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வது போன்ற விடயங்களில் மாத்திரமன்றி கொரோனாவால் பின் தள்ளிப் போடப்பட்ட டோக்கியோ சர்வதேச ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகளை எவ்வாறு 2021 கோடைக் காலத்தில் முன்னெடுப்பது போன்ற பல சவால்கள் சுகாவுக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.