உலகம்

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இத்தாலியில் மூடபட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் கடந்த ஆறுமாதகாலங்களாக வீடுகளில் இருந்த மில்லியன் கணக்கான இத்தாலியக் குழந்தைகள் ஆர்வமுடன் வகுப்பறைகளுக்குத் திரும்பினர்.

இத்தாலியின் எட்டு மில்லியன் பள்ளி மாணவர்களில், சுமார் 5.6 மில்லியன் மாணவர்கள், புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன், திங்கட்கிழமை மீண்டும் பள்ளிகளுக்குச் சென்றனர்.

மீள ஆரம்பிக்கும் பாடசாலைகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறை, ஒற்றை இருக்கை மேசைகளின் பற்றாக்குறை என கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதாக இத்தாலிய பிரதமர் யூசெப் கோன்டே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.


"குறிப்பாக நாடு ஒரு நாளைக்கு 1,500 க்கும் மேற்பட்ட தொற்றுநோய்களைப் பதிவுசெய்து கொண்டுள்ள நிலையில், உங்கள் ஆரோக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உங்களுக்கு அறிவுறுத்தப்படும் எச்சரிக்கை விதிகளுக்கு நீங்கள் உங்களை உட்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் சிரமங்களும் இருக்கும். ஆனாலும் இளைஞர்கள் நாட்டிற்கான தங்கள் பங்கைச் செய்ய வேண்டும் " என பிரதமர் தனது சமூகவலைத்தளத்தில் மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.

பள்ளிக்குத் திரும்பும் ஒரு மாணவர் அல்லது ஆசிரியருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களை உடனடியாக தனிமைப்படுத்துவதை உள்ளடக்கிய மூலோபயத்துடனான திட்டத்தையே இத்தாலிய அதிகாரிகள் நடைமுறைப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.