உலகம்

எத்தியோப்பியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்,

எத்தியோப்பியாவின் சில இடங்களில் ஒரு நூற்றாண்டில் பெய்த அதிக கனமழை என குறிப்பிடப்படும் மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எத்தியோப்பியாவின் 10 பிராந்தியங்களில் குறைந்தது ஐந்து பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 200,000 பேர் வீடற்ற நிலையில் உள்ளனர்.

வெள்ளம் காரணமாக கால்நடைகள் பலியானதோடு, பயிர்களும் அழிந்தது. குடியிறுப்பு வீடுகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை பலத்த சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய நாட்களில் அங்கு நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணங்களை ஹெலிகாப்டர் மூலம் அரசாங்கம் வழங்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே அண்டை நாடான சூடானிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இது வழக்கமான பருவகால மழையை விட அதிகளவான மழை வீழ்ச்சி என்றும் ஒரு நூற்றாண்டில் நைல் நதியின் அளவும் மிக உயர்ந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.