உலகம்

உலகளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் என்ற மருந்து நிறுவனம் தற்போது பல கோடிக் கணக்கில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துடனும், பிரிட்டன் அரசுடனும் ஒப்பந்தத்தில் உள்ளது.

எனினும் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து சென்றடைய வேண்டுமென்றால் அதற்கு 1500 கோடி டோசேஜ் வேண்டும் என்றும் இதற்குக் குறைந்தது 5 ஆண்டுகள் வரை செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளது.

உலகில் தற்போது நூற்றுக் கணக்கான கோவிட்-19 தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் இருந்து வரும் போதும் இதில் 35 தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்ட பரிசோதனைகளில் இருந்து வருகின்றன.

ஆனால் இந்நிறுவனங்கள் குறுகிய காலத்தில் பொது மக்கள் அனைவருக்கும் இத்தடுப்பு மருந்துகள் கிடைக்கும் விதத்தில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவில்லை என்றும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீரம் நிறுவனம், ஆஸ்ட்ரா ஜெனேகா, நோவாவாக்ஸ் போன்ற 5 மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து முதற்கட்டமாக 100 கோடி டோசேஜ் கோவிட்-19 தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் திட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 29 737 991
மொத்த இறப்புக்கள் : 939 364
குணமடைந்தவர்கள் : 21 548 231
ஆக்டிவ் தொற்றுக்கள் : 7 250 396
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 60 909

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்...)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 6 788 144 : மொத்த இறப்புக்கள் : 200 197
இந்தியா : 5 020 359 : 82 091
பிரேசில் : 4 384 299 : 133 207
ரஷ்யா : 1 073 849 : 18 785
பெரு : 738 020 : 30 927
கொலம்பியா : 728 590 : 23 288
மெக்ஸிக்கோ : 676 487 : 71 678
தென்னாப்பிரிக்கா : 651 521 : 15 641
ஸ்பெயின் : 603 167 : 30 004
ஆர்ஜெண்டினா : 577 338 : 11 852
சிலி : 437 983 : 12 040
ஈரான் : 407 353 : 23 453
பிரான்ஸ் : 395 104 : 30 999
பிரிட்டன் : 374 228 : 41 664
பங்களாதேஷ் : 341 056 : 4802
சவுதி அரேபியா : 326 930 : 4338
பாகிஸ்தான் : 303 089 : 6393
இத்தாலி : 289 990 : 35 633
ஜேர்மனி : 264 844 : 9445
கனடா : 138 803 : 9188
சீனா : 85 214 : 4634
சுவிட்சர்லாந்து : 47 751 : 2028
இலங்கை : 3271 : 13

இன்றைய நிலவரப்படி உலகளாவிய அடிப்படையில் மொத்த தொற்றுக்கள் 2 கோடியே 97 இலட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் , மொத்த இறப்புக்கள்
9 இலட்சத்து 39 ஆயிரர்துக்கும் அதிகமாகவும் உள்ளன.

அமெரிக்காவில் மிக அதிகபட்சமாக கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது. இது உலகளாவிய அடிப்படையில் மொத்த கொரோனா உயிரிழப்புக்களின் 21.31% சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பெரும் தொற்றில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள,

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“13வது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை எந்தவொரு காரணத்தினாலும் மீற முடியாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொது மக்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவது நல்லது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் 2020 செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்காக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் சாந்தலிங்கத்தை அணுகியது.

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.