உலகம்

இத்தாலியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அங்கோனா துறைமுகத்தில் இன்று புதன் கிழமை (16) அதிகாலையில் பாரிய வெடிவிபத்தும், தீ விபத்தும் ஏற்பட்டதாகத் தெரிய வருகிறது.

வண்ணப்பூச்சுகள், கரைப்பான்கள், மற்றும் திரவ நைட்ரஜன் மற்றும் மீத்தேன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அடங்கியதாகக் கூறப்படும் பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்ட தாகவும், தொடர்ந்து ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினார்கள். நகரம் முழுவதும் அடர்த்தியான, கடுமையான புகையால் மூடப்பட்டிருந்தது. உள்ளூர்வாசிகள் தங்கள் ஜன்னல்களை மூடி வைக்க அறிவுறுத்தப்பட்டார்கள். உடனடியாக பூங்காக்கள், பள்ளிகள் மற்றும் நகர அலுவலகங்கள் மூடப்பட அறிவுறுத்தப்பட்டது.

சேமிப்புக் கிடங்குகளின் ஒரு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்தே புதன்கிழமை அதிகாலையில் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆயினும் வெடிவிபத்தின் பின்னரே தீவிபத்து ஏற்பட்டதாக மக்கள் சிலர் தெரிவித்துள்ளார்கள். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அட்ரியாடிக் கடற்கரையில் உள்ள லு மார்ச்சே பிராந்தியத்தில் உள்ள அன்கோனா மற்றும் பல அண்டை நகரங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்கு ஒன்றினைந்து போராடினார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.