உலகம்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் மோசமாகவுள்ள வாட் மாநிலத்தில் புதிய கட்டுபாட்டு நடவடிக்கைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. 100 க்கும் மேற்பட்ட நபர்களுடனான நிகழ்வுகளும் தடைசெய்யப்படுகின்றன.

வாட் மாநிலத்தின் மருத்துவமனைகள் திறன்கள் முழுவதும் தேவைப்படுமளவிற்கு, வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்தின் மேற்குத் திசையில் அமைந்துள்ள பிரெஞ்சு மொழி மாநிலமான "வாட் " புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செப்டம்பர் 17 வியாழக்கிழமை இன்று பிற்பகல் 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிய வருகிறது.

புதிய கட்டுப்பாட்டு விதிகளின் கீழ், இரவு விடுதிகள் மூடப்பட வேண்டும். அனைத்து உட்புற அமைப்புகளிலும் முகமூடிகள் கட்டாயமாக்கப்படும். 100 க்கும் மேற்பட்ட நபர்களுடனான நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. அடையாளப் பதிவுகளும், கஃபேக்கள், உணவகங்கள், பார்கள் அல்லது கேசினோக்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகமூடி அணிவது கட்டாயமாகும். தியேட்டர்கள், கச்சேரி அரங்குகள், அருங்காட்சியகங்கள், கண்காட்சிகள் அல்லது நூலகங்கள் போன்ற பொதுவில் அணுகக்கூடிய அனைத்து மூடிய அறைகளிலும் முகமூடி தேவை பொருந்தும்.

தற்போது, சுவிற்சர்லாந்தில் தனிநபர் அடிப்படையில் அதிக தொற்றுநோய்களைக் கொண்டுள்ள மாநிலமாக "வாட்" மாநிலம் உள்ளது. செப்டம்பர் 11, வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் பதிவான 528 தொற்றுக்களில், 208 தொற்றுக்கள் வாட் மாநிலத்தில். இது சுவிற்சர்லாந்தின் புதிய தொற்றுக்களின் புள்ளி விபரத்தில் 40 சதவீதமாகும்.

கடந்த 14 நாட்களில் வாட் மாநிலத்தில் 100,000 குடியிருப்பாளர்களுக்கு 197 தொற்றுக்கள் பதிவாகியுள்ளது. ஃப்ரிபோர்க் (136) மற்றும் ஜெனீவா (124) ஆகிய மாநிலங்களும் அதிக தொற்றுக்களைப் பதிவு செய்துள்ளன. செப்டம்பர் 14 திங்களன்று, கடந்த 14 நாட்களில், நோய்த்தொற்று வீதம் முதல்முறையாக 100,000 குடியிருப்பாளர்களுக்கு 60 என்ற சுவிற்சர்லாந்தின் நோய் தொற்று வரம்பைத் தாண்டியது. இது அரசாங்கத்தின் சொந்த அளவீடுகளின்படி, சுவிற்சர்லாந்தை அதிக ஆபத்து நிறைந்த பகுதியாக மாற்றும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 15 ம் திகதி ஊடகங்களுடன் உரையாடிய வாட் மாநில சுகாதார இயக்குனர் ரெபேக்கா ரூயிஸ், மாநிலத்தின் மருத்துவமனைகள், தொற்றாளர்களைப் பராமரிக்கும் திறன் அளவு போதாது என்பது விரைவில் நிகழக்கூடும்” என எச்சரித்தார். மேலும் தொற்று விகிதங்கள் தொடர்ந்து உயரும் என மாநில அதிகாரிகள் கவலை கொண்டுள்ளதையும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், "குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதும், சுகாதார அமைப்பு அதிக சுமை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதும் மாநில அரசின் குறிக்கோளாகும்.

மாநிலப் பொருளாதாரத் துறையின் தலைவர் பிலிப் லியூபா கருத்துத் தெரிவிக்கையில், " பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த கவலைகள் இரண்டாம் நிலை. அரசாங்கத்தின் முதல் கவலை மக்களின் ஆரோக்கியம். இரண்டாவது கவலை பொருளாதாரம்." எனக் குறிப்பிட்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.