உலகம்

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் செயலிகளான WeChat மற்றும் TikTok ஐ தடை செய்ய வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இச் செயலிகளை பதிவிறக்குவதைத் தடுக்கும் உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை வெளியிடுவதாக வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

எந்தவொரு தளத்திலும் எந்தவொரு ஆப் ஸ்டோர் மூலமாகவும் செயலிகளை விநியோகிக்கும் உத்தரவும் தடைசெய்யப்படும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிற்கு சொந்தமான இந்த செயலிகள் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் என்று அமெரிக அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.

ஆரக்கிள் மற்றும் டிக்டோக் உரிமையாளர் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு இடையிலான கூட்டாண்மை ஒப்புக் கொள்ளப்பட்டு அது அதிபர் டிரம்பால் அங்கீகரிக்கப்பட்டால் செயலிகள் தடை செய்யப்படாது எனவும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளிப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத நிலை உள்ளது. எனினும் ஞாயிற்றுக்கிழமை வரை கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னர் அவர் அதை மறுபரிசீலனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.