உலகம்

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதற்கான அறிவிப்பினை இன்று செப்டெம்பர் 18 வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது. செப்டம்பர் 19 சனிக்கிழமை நள்ளிரவில் நடைமுறைக்கு வருவதாகத் தெரிய வருகிறது.

அன்டோரா, பெல்ஜியம், பிரான்ஸ், குரோஷியா, லக்சம்பர்க், மால்டா, மொனாக்கோ, ருமேனியா, ஸ்பெயின், செக் குடியரசு மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணம் தவிர்க்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு மேலதிகமாக, டென்மார்க் தற்போது எஸ்தோனியா, பின்லாந்து, அயர்லாந்து, ஐஸ்லாந்து, லாட்வியா, லித்துவேனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கான பயணங்களுக்கும் எதிராக அறிவுறுத்துகிறது. ஏனெனில் டென்மார்க்கிலிருந்து வருபவர்களுக்கு இந்த நாடுகள் தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சில டென்மார்க்கின் நோய் தொற்று வரம்பு எல்லையைத் தாண்டி, தொற்றாளர்களைக் கொண்டிருப்பதனால் இவ்வாறான ஆலோசனையை அறிவுறுத்தியதாக அறியவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.