உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 31 530 268
மொத்த இறப்புக்கள் : 970 238
குணமடைந்தவர்கள் : 23 146 345
ஆக்டிவ் தொற்றுக்கள் : 7 413 685
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 61 952

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 7 047 643 : மொத்த இறப்புக்கள் : 204 577
இந்தியா : 5 568 740 : 88 992
பிரேசில் : 4 560 083 : 137 350
ரஷ்யா : 1 115 810 : 19 649
பெரு : 772 896 : 31 474
கொலம்பியா : 770 435 : 24 397
மெக்ஸிக்கோ : 700 580 : 73 697
ஸ்பெயின் : 671 468 : 30 663
தென்னாப்பிரிக்கா : 661 936 : 15 992
ஆர்ஜெண்டினா : 640 147 : 13 482
பிரான்ஸ் : 458 061 : 31 338
சிலி : 447 468 : 12 298
ஈரான் : 429 193 : 24 656
பிரிட்டன் : 398 625 : 41 788
பங்களாதேஷ் : 352 178 : 5007
சவுதி அரேபியா : 330 798 : 4542
ஈராக் : 322 856 : 8625
பாகிஸ்தான் : 306 886 : 6424
துருக்கி : 304 610 : 7574
இத்தாலி : 299 506 : 35 724
ஜேர்மனி : 276 031 : 9485
கனடா : 145 415 : 9228
சீனா : 85 297 : 4634
சுவிட்சர்லாந்து : 50 664 : 2054
இலங்கை : 3299 : 13

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளாவிய அடிப்படையில் மொத்த தொற்றுக்கள் 3 கோடியே 15 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் மொத்த இறப்புக்கள் 9 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. உலகளாவிய அடிப்படையில் மொத்த இறப்புக்கள் 1 மில்லியனை அதாவது 10 இலட்சத்தை நோக்கி விரைந்து வருகின்றது.

இதேவேளை சீனாவில் தயாரிக்கப் பட்ட 3 கோவிட்-19 தடுப்பு மருந்துகள் பாகிஸ்தானைச் சேர்ந்த கிட்டத்தட்ட 10 000 தன்னார்வலர்களிடம் பரிசோதிக்கப் பட்டு வருவதாகவும் இதன் முடிவுகள் 6 மாதத்துக்குள் பெறப்படும் என்றும் பாகிஸ்தானின் சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்துகள் ஏற்கனவே விலங்குகளிடம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ள போதும் சீனா பாகிஸ்தானில் இந்தச் சோதனையை நடத்த வேண்டியதன் காரணம் என்னவென்ற கேள்வி சர்வதேச சமூகத்திடம் எழுந்துள்ளது.

உலகின் முதல் நாடாக ரஷ்யா தயாரித்திருக்கும் ஸ்புட்னிக் V என்ற தடுப்பு மருந்தினை சுமார் 12 பில்லியன் டோஸேஜ்கள் உற்பத்தி செய்ய பல உலக நாடுகள் ஒப்பந்தம் செய்து வருகின்றன. இதில் பெரும்பாலான நாடுகள் , ஆசிய, அமெரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளாகும்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திறமையாகச் செயற்படவில்லை என்றும் அவர் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்து வருகின்றது என்றும் சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. போரிஸ் ஜான்சன் ரகசியமாக மேற்கொண்ட இந்த சர்வேயில், இங்கிலாந்தில் 1/3 பங்கினரே சமூக இடைவெளியைப் பின்பற்றுவதாகவும், கோவிட்-19 தொடர்பான மக்களின் அச்சம் இன்னமும் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தவிர அடுத்த சில தினங்களில் நாடு தழுவிய அடிப்படையில் ஊரடங்கை அமுலுக்குக் கொண்டு வரவும் போரிஸ் இன் அரசு திட்டமிட்டு வருகின்றது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

புரேவி புயல் அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி; தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.