உலகம்

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.

இதனால் 2100 ஆமாண்டுக்குள் உலக சமுத்திரங்களின் நீர் மட்டம் 38 செண்டிமீட்டர் உயரும் என்றும் இதனால் சிறிய தீவுகளும், கடற்கரையோரம் இருக்கும் உலகின் பிரதான நகரங்களும் நீரில் மூழ்கி அழியும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

இந்த ஆய்வு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா தலைமையில் நிகழ்த்தப் பட்டது. உலக வெப்பமயமாக்கலை பசுமை இல்ல வாயுக்கள் அதாவது மனித செயற்பாடுகளால் அதிகரித்துள்ள கார்பன் வெளியேற்றம் மிக அதிகமாகத் தூண்டி வருகின்றது. இந்நிலையில் இந்த வெப்ப அதிகரிப்பால் துருவப் பகுதிகளிலுள்ள பனிக்கட்டிகளில் இருந்து உருகும் நீரானது மொத்த உலகக் கடல் மட்ட உயர்வுகளில் 1/3 பங்கை வகிக்கின்றது.

கிழக்கு அண்டார்டிக்கா பகுதியில் வெப்ப நிலை அதிகரிப்பானது பனிப்பொழிவை ஏற்படுத்தி அடர்ந்த பனிக்கட்டிகளை உருவாக்கவும் செய்வதால், அண்டார்டிகாவில் பனி இழப்பைக் கணிப்பது மிகவும் கடினமானது என்றும் அமெரிக்க நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.