உலகம்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூத்த ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் எதிர்வரும் வாரம் மிக அவசரமாக சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின் போது இலண்டன் நிர்வாகத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளான குறித்த பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வது தொடர்பில் உறுதிபடப் பேசவுள்ளனர்.

பிரெக்ஸிட்டை ஆதரித்து வரும் ஐரோப்பிய யூனியனுக்கு, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசின் சர்வதேச விதிகளை மீறும் சட்ட மூலம் ஒன்றின் அடிப்படையில் குறித்த பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீது பிரயோகிக்கப் படும் அழுத்தம் மிகவும் சவாலாக உள்ளது. பிரெக்ஸிட் தொடர்பான அடுத்த சுற்று கடுமையான விவாதங்கள் புருஸ்ஸெல்ஸில் ஆக்டோபர் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப் படவுள்ளது. ஜனவரி 31 இல் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகிய போதும், அதன் தனிப்பட்ட சந்தை, மற்றும் கஸ்டம்ஸ் யூனியன் போன்றவற்றில் இருந்து இந்த வருடக் கடைசியில் தான் விலகவுள்ளது.

இந்நிலையில், புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏதும் மேற்கொள்ளப் படாமல் விட்டால் பொருளாதாரக் குழப்பங்கள் ஏற்படப் பெரும் வாய்ப்புள்ளதாக வர்த்தக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.