உலகம்

சுவிற்சர்லாந்தின் புகழ்பெற்ற லொசேன் ஈ.எச்.எல் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் கல்விக் கூடத்தில் சுமார் 2,500 மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பிராந்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.

இந்தக் கல்விக் கூடத்தின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் சுமார் 75 சதவீதமானவர்கள், செப்டம்பர் 28 ம் திகதி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று " வோ" மாநிலப் பிராந்திய அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த உயர் கல்விச் சாலையின் பல்வேறு துறைகளில் கல்விகற்கும் மாணவர்கள் மத்தியில் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளன. இந்த வைரஸ் தொற்றின் காரணமாக கண்டிப்பாக 2,500 மாணவர்களைத் தனிமைப்படுத்த வேண்டியுள்ளதெனவும், இந்த எண்ணிக்கையின் மேலாக அதிக மாணவர்களைத் தனிமைப்படுத்த முடியாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.