உலகம்

நாளை வெள்ளிக்கிழமை முதலான வார இறுதி நாட்களில், சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெறலாம் என சுவிஸ் வானிலை மையம் அறிவித்துள்ளது.

வலேஸ் மற்றும் சுவிற்சர்லாந்தின் மத்திய கிழக்கு பகுதியிலும் கடும் பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் சுவிஸ் இத்தாலி எல்லைப்புறத்திலுள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு மற்றும் கிரான் சான் பெர்னார்டோவின் மாநில சாலைகளில் போக்குவரத்து சிரமமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு ஏற்படும் அபாயம் குறித்து தரம் 3 எச்சரிக்கையை விடுத்த சுவிஸ் காலநிலை அவதானிப்பு நிலையத்தின் அறிக்கையில், 1800 மீட்டருக்கு மேல் 50-90 சென்டிமீட்டர் வரையிலும், 1200 மீற்றருக்கு மேல் 20-40 சென்டிமீட்டர் பனி மூட்டமும் எதிர்பார்க்கப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் பனி அகற்றுதல் மற்றும் குளிர்கால பனி எதிர்ப்பு வாகனங்களின் அவசியம் இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுவதாக அறியவருகிறது.<

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.