உலகம்

சுவிற்சர்லாந்தின் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் ஆபத்து பகுதிகளின் பட்டியலில் இத்தாலியின் லிகுரியாவை சேர்க்கும் முடிவை வெள்ளிக்கிழமை அறிவித்தது.

செப்டம்பர் 28 திங்கள் முதல் ஆபத்தில் உள்ள பகுதிகளின் பட்டியலில் லிகுரியா சேர்க்கப்பட்டுள்ளமையால், இப்பகுதியிலிருந்து சுவிற்சர்லாந்திற்குத் திரும்பும் நபர்கள் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என FOPH தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளின் நிலைமையை, பிராந்திய அடிப்படையில் சுவிஸ் கூட்டமைப்பு பகுப்பாய்வு செய்கிறது. 100,000 மக்களுக்கு 60 தொற்றுக்கள் என்ற வரம்பை மீறும் பகுதிகளை ஆபத்துப்பட்டியலில் இணைத்து வருகிறது. அன்மையில் பிரான்சின் ஒன்பது பிராந்தியங்களை இப்பட்டியலில் இணைத்திருந்து. தற்போது  இத்தாலியின் லிகுரியா பிராந்தியத்தில் 100,000 மக்களுக்கு 80 தொற்றுக்கள் உள்ள நிலையில், லிகுரியா கோவிட் -19 அதிக ஆபத்து உள்ள ஒரு பகுதியைக் குறிக்கிறது எனத் தெரிவித்து, FOPH எனும் சுவிஸ் மத்திய பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம் அதனை ஆபத்துப்பட்டியலில் இணைத்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு லிகுரியா பிராந்தியத்தின் தலைவர் ஜியோவானி டோட்டி கடும் ஆட்சேபனை தெரிவித்ததுடன், வெளியுறவு மந்திரி டி மாயோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், சுவிஸ் அதிகாரிகளுடன்அரசாங்கம் விரைவில் பேச்சு வார்த்தை மேற்கொள்ளும் எனத் தெரிவித்தாகவும் அறியவருகிறது.

"லிகுரியாவில் தொற்றுநோயைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். எங்கள் பிராந்தியத்தை மோசமான வெளிச்சத்திற்கு கொண்டு வந்து எங்கள் வணிகங்களை சேதப்படுத்தும் நடவடிக்கைகளால் எங்கள் முயற்சிகள் பாதிக்கப்படுகின்றன என்பதை நாங்கள் ஏற்கவில்லை. மறுதொடக்கம் செய்ய பல முயற்சிகளுக்குப் பிறகு, மேலும் நிறுத்தங்களை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாது" என டோட்டி செய்தியாளர்க்குத் தெரிவித்துள்ளார்.

லிகுரியா பிராந்தியத்தின் La Spezia பிரதேசத்தில் நிகழ்ந்த தொற்று உயர்வினை, மொத்தப் பிராத்தியத்திற்குமாக காண்பது பொருத்தமற்றது என லிகுரியன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த பிரதேசத்திலும் தொற்று வீதம் இன்னும் வீழ்ச்சியடைந்து வருகிறது, மீதமுள்ள பகுதி பெரும்பாலும் எச்சரிக்கை அளவுக்கு கீழே உள்ளது, சுவிஸின் அறிவிப்பு பிராந்திய நலனைப் பாதிக்கிறது என அவர்கள் வாதிடுகின்றனர். ஆயினும் சுவிஸ் மத்திய அரசு அறிவித்துள்ள முடிவில் இதுவரை எந்த மாற்றத்தினையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.