உலகம்

சுவிற்சர்லாந்து மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையினை மீண்டும் ஒருமுறை நாட்டு நலனை முன்னிறுத்திச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இன்று இடம்பெற்ற ஐந்து சட்டத்திருத்தங்களுக்கான பொதுசன வாக்களிப்பில், மூன்றுக்கு இல்லையெனவும், இரண்டு விடயங்களுக்கு ஆம் எனவும் உறுதியான முடிவுகளைத் தெரிவித்துள்ளார்கள்.

எஸ்.வி.பி. கட்சியின் விசமத்தனமான பிரச்சாரங்களுடன் கூடிய மிதமான குடியேற்றத்திற்கான முன் முயற்சியை பெரும்பான்மையாக நிராகரித்துள்ளார்கள். மேலும் குழந்தைகளுக்கான உதவிகளில் விலக்கு மற்றும் மிருகங்களை வேட்டையாடுதல் சட்டத் திருத்தம் என்பனவும் நிராகரிக்கப்பட்டது. தந்தைவழி விடுப்பு மற்றும் போர் விமானங்களுக்கான நிதியொதுக்கீடு என்பவற்றுக்கு மக்கள் ஆம் என்று வாக்களித்துள்ளனர்.

இன்றைய வாக்களிப்புக் குறித்து மத்திய கூட்டாட்சி உறுப்பினர் கரின் கெல்லர் சுட்டர் வாக்களிப்பு முடிவுகள் பற்றி கூறுகையில், "குடிமக்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்த விரும்பினர் என்பதை வாக்களிப்பின் முடிவுகள் வெளிப்படுத்துகிறது " எனத் தெரிவித்துள்ளார்.

இன்றைய வாக்களிப்புக்களின் அனைத்து இறுதி முடிவுகளும் வருமாறு;

மிதமான குடியேற்றத்திற்கான முன்முயற்சிக்கு: இல்லை

மிதமான குடியேற்றத்திற்கான மக்கள் கட்சியின் பிரபலமான முன்முயற்சி திட்டவட்டமாக நிராகரிக்கப்படுகிறது, போதுமான எண்ணிக்கையில் மாநிலங்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கவில்லை. 61.7% வாக்குகளால் இந்த முயற்சி நிராகரிக்கப்பட்டது.

தந்தைவழி விடுப்புக்கு: ஆம்

இதன் மூலம் வருங்கால தந்தையர்களுக்கு இரண்டு வார ஊதியத்துடனான விடுமுறைக்கு 60.34% மக்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள். சுவிற்சர்லாந்து இனி ஐரோப்பாவில் தந்தைவழி விடுப்பு இல்லாத ஒரு நாடாக இருக்காது.

குழந்தைகளுக்கான வரி விலக்கு கழிவுகள்: இல்லை

குழந்தைகளுக்கு அதிக வரி விலக்குகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தச் சட்டவாக்கத்திற்கு "இல்லை" என 63.24% மக்கள் வாக்களித்துள்ளார்கள். இது வெற்றிபெற்றிருக்க வேண்டிய ஒரு விடயம். ஆயினும் போதிய தெளிவின்மையால் இதனை மக்கள் நிராகரித்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

வேட்டை சட்டத்தில் திருத்தம் : இல்லை

தற்போது நடைமுறையிலுள்ள வேட்டையாடும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வாக்கெடுப்பில் 51.93% எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காடுகளில் ஓநாய்களின் அளவு அதிகரிப்புக் காரணமாக, இந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர யோசிக்கபெற்றது. ஆயினும் இது நிராகரிக்கப்பட்டதனால் பழைய நடைமுறையே தொடரும்.

போர் விமானங்களுக்கு நிதி: ஆம்

2014ல் கொண்டு வரப்பட்டு, நிராகரிக்கபட்ட போர் விமானங்கள் கொள்வனவுக்கான ஒப்புதலைப்பெற, மேலதிக திருத்தங்களுடன், இராணுவ நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு என்ற வகையில் லேயே வெற்றி பெற்றுள்ளது. முன் வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு " ஆம்" என மக்கள் வாக்களித்துள்ளார்கள். ஆனால் இது மிகச் சொற்பமான விகிதத்தில், 50.1% சுமார் 8000 வாக்குகளால் மட்டுமே வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வாக்களிப்புக்களின் படி நோக்கின் சுவிஸ் மக்கள் மீண்டும் ஒரு தடவை தமது ஜனநாயக வாக்குரிமையை சரியாகப் பயன்படுத்தி நாட்டின் நலனுக்கு துணை நின்றுள்ளார்கள் என்பது புலனாகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.