உலகம்

உலகளாவிய கோவிட்-19 தொற்று இறப்புக்கள் சமீபத்தில் 10 இலட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் இந்தப் புள்ளிவிபரம் மிகவும் எதிர்பாராததும், வேதனை மிக்க மைல்கல் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெரும் தொற்று 10 மாதங்களுக்குள் உலகம் முழுதும் 10 இலட்சத்துக்கும் அதுகமான உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 3 கோடியே 39 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை இந்த வைரஸ் இதுவரை தொற்றியுள்ளது.

நோய்த் தொற்றில் இருந்து இதுவரை மீண்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 52 இலட்சத்துக்கும் அதிகமாகும். இந்நிலையில் கோவிட் அச்சுறுத்தலுக்கு தனிப்பட்ட எந்த உயிரையும் இனி விலை கொடுக்க நாம் அனுமதிக்கக் கூடாது. தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வதன் மூலமும், எமது பழக்க வழக்கங்கள், ஒத்துழைப்பு மற்றும் அறிவியல் போன்றவற்றின் துணையுடன் நாம் இந்த சவாலைக் கடந்து வர முடியும்!

இவ்வாறு அந்தோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தியா உட்பட சில நாடுகள் கொரோனாவால் ஏற்பட்ட உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை என அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக நவம்பர் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள அதிபர் டிரம்ப் மற்றும் ஜோ பிடென் ஆகியோர் ஒருவரை இன்னொருவர் சாடி வெளியிட்டு வரும் தேர்தல் பிரச்சாரக் கருத்துக்கள் சூடு பிடித்திருந்தன. இந்நிலையில் இன்று புதன்கிழமை இவர்கள் இருவரும் நேரடி விவாதத்தில் ஈடுபட்டு வருவதை தொலைக் காட்சி வாயிலாக அமெரிக்க மக்களும், சர்வதேசமும் கூர்ந்து கவனித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Worldmeter இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 33 926 764
மொத்த இறப்புக்கள் : 1 014 175
குணமடைந்தவர்கள் : 25 211 892
ஆக்டிவ் தொற்றுக்கள் : 7 700 697
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 66 009

நாடளாவிய புள்ளி விபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 7 411 276 : மொத்த இறப்புக்கள் : 211 052
இந்தியா : 6 245 404 : 97 761
பிரேசில் : 4 780 317 : 143 010
ரஷ்யா : 1 176 286 : 20 722
கொலம்பியா : 824 042 : 25 828
பெரு : 811 768 : 32 396
ஸ்பெயின் : 758 172 : 31 614
மெக்ஸிக்கோ : 738 163 : 77 163
ஆர்ஜெண்டினா : 736 609 : 16 519
தென்னாப்பிரிக்கா : 672 572 : 16 667
பிரான்ஸ் : 550 690 : 31 893
சிலி : 462 991 : 12 741
ஈரான் : 457 219 : 26 169
பிரிட்டன் : 446 156 : 42 072
பங்களாதேஷ் : 363 479 : 5251
இத்தாலி : 314 861 : 35 894
பாகிஸ்தான் : 312 263 : 6479
ஜேர்மனி : 291 191 : 9559
கனடா : 156 961 : 9291
சீனா : 85 403 : 4634
சுவிட்சர்லாந்து : 53 282 : 2074
இலங்கை : 3379 : 13

கோவிட் 19 பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்கப் பின்பற்றப் பட வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைத் தொடருங்கள்...

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.