உலகம்

இத்தாலியின் பிரதமர் யூசெப் கோன்டே மற்றும் பிராந்தியங்களின் அமைச்சர்கள் பிரான்செஸ்கோ போசியா மற்றும் ராபர்டோ ஸ்பெரான்சா ஆகியோருடனான இன்றைய கலந்துரையாடலில் கொரோனா வைரஸ் 2வது அலை தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனைகளில் , விழாக்கள், விருந்துகளில் 30 பேர் வரையில் பங்கேற்பு, பள்ளி பயணங்களில் நிறுத்தங்கள், இரவு 9 மணிக்குப் பிறகு வணிக வளாகங்களின் முன் பார்க்கிங் இல்லை, பார்கள் மற்றும் உணவகங்களுக்கு புதியநேரக்கட்டுப்பாடுகள், பொதுப் போக்குவரத்தில் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் தொலைதூரக் கல்வி வழங்குவதற்கான முன்மொழிவு என்பன ஆலோசிக்கப்பட்டன.

இதன்படி உணவகங்கள், உணவகங்கள், பிஸ்ஸேரியாக்கள் நள்ளிரவில் மூடப்படும், அதே நேரத்தில் பிற வணிகங்கள் இரவு 9 மணிக்கு பூட்டப்படும். டேக் எவே உணவுகளை வழங்கும் அனைத்து இடங்களும் 24 வரை திறந்திருக்கும், ஆனால் உணவை உணவகத்தின் முன் அல்லது தெருவில் உட்கொள்ள முடியாது.

தனியார் வீடுகளில் கூட கூட்டங்கள் கூடுவதை தடைசெய்ய அமைச்சர் ஸ்பெரான்சா முன்மொழிந்தது கடுமையான விவாதத்தைத் தூண்டியது. பிரதம மந்திரி கோன்டே வீட்டிற்குள் கூட்டங்களைத் தவிர்ப்பதற்கான ஒரு பரிந்துரையை ஆறுக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெறக் கூடாது என மாற்றியமைத்தார்.

வெளிப்புற அரங்கங்களில் ஆயிரம் பார்வையாளர்களுக்கு அதிகமாக இல்லாவிடினும், அரங்குகளின் திறனளவில் 15% வரையும், உட்புற அரங்குகளுக்கு அதிகபட்சமாக 200 பேர் வரை அனுமதிக்கலாம் எனவும் முடிவானது.

மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் நடமாட்டங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான எந்த உத்தரவாதமும் இல்லாததால் பள்ளி பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மத விழாக்களுக்கு (திருமணங்கள், திருமணப்பதிவுகள்) தற்போதுள்ள நெறிமுறைகளின்படி 30 க்கும் மேற்படாத விருந்தினர்களுடன் செய்து கொள்ளலாம். இறுதிச் சடங்குகளுக்கும் இது பொருந்தும்.

இந்த யோசனைகள் மேலும் சில திருத்தங்களுடன் விரைவில் நாடாளவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிய வருகிறது.

இது இவ்வாறிருக்க பிரான்சில் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளமையால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், பிரான்சில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தாக்கம் குறித்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானெல் மக்ரோன் வரும் புதன்கிழமை தொலைக்காட்சி நேரலையில் மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.