உலகம்

சுவிற்சர்லாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,445 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக சுவிஸ் மத்திய கூட்டாட்சி பொது சுகாதார அலுவலகம் (FOPH) தெரிவித்துள்ளது.

மேலும் 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , புதிய இறப்புகள் 7எனவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாடாளவிய ரீதியில், தற்போது 4,338 பேர் தனிமைக் கட்டுப்பாட்டிலும், 10,788 பேர் சுய தனிமைப்படுத்தலிலும் உள்ளனர்.

இது இவ்வாறிருக்க சுவிஸ் மத்திய சுகாதார, உள்துறை அமைச்சர் அலைன் பெர்செட் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கையில், " உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் இருக்கையில், சுவிற்சர்லாந்து மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. எதிர் வரும் வாரங்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் தொற்றாளர் தொகை அதிகரிக்கலாம். சென்ற புதன் கிழமை முதல் தொற்று வீதப் பரிணாமம் கவலை அளிக்கிறது. ஆனாலும், உண்மையில் இந்த உயர்வு, அதிகரிக்கப்பட்ட பல சோதனைகள் மூலம், ஆனது. இதுவரையில் மறைக்கப்பட்ட அல்லது மறைந்திருந்த தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்பது நேர்மறையான விடயமே. " என்றார்.

அவர் மேலும் கூறுகையில், " தற்போதைக்கு மருத்துவமனைகளில் இன்னும் அழுத்தம் இல்லை. ஆனால் மருத்துவமனையில் அதிகமானோர் சேர்க்கப்படுவதையும் நாங்கள் எதிர்பார்க்க வேண்டும். வயதானவர்களைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் சராசரி வயதைக் குறைவாக வைத்திருக்கவும் இலக்கு இருக்கும். ஆனால் அது இலகுவில் சாத்தியமில்லை. மக்கள் இந்த சூழ்நிலையால் சோர்ந்து போயிருக்கிறார்கள், நான் அதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து முன்னேற வேண்டும் . எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக தூரத்தை வைத்திருக்க, கைகளை கழுவ, முகமூடியைப் பயன்படுத்த மறந்துவிடக் கூடாது. தொற்று எண்ணிக்கை அதிகமானால் பூட்டுதல் சாத்தியமே. ஆனால் அதனை இனி மாநில அரசுகள் முடிவு செய்யும் " எனத் தெரிவித்தார்.

பிந்தைய செய்தி: சுவிஸில் நாடாளவிய இரண்டாவது பூட்டுதலைத் தவிர்ப்பதற்காக தலைநகரில் அவசர‘நெருக்கடி உச்சிமாநாடு’ !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.