உலகம்

சுவிற்சர்லாந்தில் மீண்டும் அதிகரித்து வரும் புதிய வைரஸ் தொற்றுகளினால், நாடாளவிய இரண்டாவது பூட்டுதலைத் தவிர்ப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதற்காக முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுடுக்கபட்டுள்ளது.

எதிர் வரும் வியாழக்கிழமை சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு தலைநகரில் ஒருங்கமைக்கும் இந்த நெருக்கடி உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி சிமோனெட்டா சோமருகா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆலோசனை மாநாட்டில், சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட், பொருளாதார அமைச்சர் கை பர்மலின், மாநில அரசாங்கங்களது மாநாட்டின் தலைவர் கிறிஸ்டியன் ராத்கேப், லூகாஸ் ஏங்கல்பெர்கர் மற்றும் உயர் சுகாதார மற்றும் பொருளாதார இயக்குநர்கள் கிறிஸ்டோஃப் புருட்சின் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு விதிவிலக்கான நாடல்ல - பூட்டுதல் சாத்தியமே ! : அலைன் பெர்செட்

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அழிவுகரமான இரண்டாவது பூட்டுதலைத் தவிர்ப்பதற்காகவே இந்த அவசர மாநாடு கூட்டப்படுகிறது. தொற்றுக்களின் எண்ணிக்கை தற்போதைய பாதையில் தொடர்ந்தால், ஒரு புதிய பூட்டுதலுக்கான சாத்தியம் பெருமளவில் உண்டு என அரசாங்கம் கருதுவதாலேயே இந்த அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

ஏற்கனவே பிரான்ஸ், இத்தாலி, ஆகிய நாடுகளில் இவ்வாறான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருப்பதும், அவற்றின் மூலம் புதிய செயற்திட்டங்களை அறிமுகப்படுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.