உலகம்

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக, அரசாங்கம் எடுக்கவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான, தொலைக்காட்சி உரையாடல் ஒன்றினை இன்று புதன்கிழமை இரவு 19:55 மணிக்கு நிகழ்த்தினார்.

புதன்கிழமை காலை நிலவரப்படி, பிரான்சில் நாடாளவிய ரீதியில், 1,539 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில், இன்று இரவு இரு செய்தியாளர்களுடன் இடம்பெறும்  ஜனாதிபதியின் உரையாடல் முக்கிய அறிவிப்புக்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இன்றைய உரையாடலில் கொரோனா வைரஸ் தொற்றின் அதிகரிப்பு கவலை தரும் வகையில் அமைந்திருக்கும் நிலையில், பொது மக்களின் நலன் கருதி, வரும் சனிக்கிழமை முதல் நாடாளவிய ரீதியில் அவசரகால நிலையை பிறப்பிக்கப்படும் என்பதை தெரிவித்தார்.

இத்தாலியில் கிறிஸ்மஸ் நேரத்தில் இரண்டாவது பூட்டுதல் தேவைப்படலாம் !

வைரஸின் கட்டுப்பாட்டை பிரான்ஸ் இன்னமும் இழந்துவிடவில்லை. ஆனால் COVID-19 வழக்குகளின் எண்ணிக்கையில் மீண்டும் எழுச்சி பெறுவது சுகாதார சேவையை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்று கூறிய ஜனாதிபதி மக்ரோன் மேலும் புதிய கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக உரையாடினார். அதன்படி, மிக மோசமாக உருவாகி வரும் இந்தச் சூழலில், வரும் சனிக்கிழமை முதல், இரவு 09.00 மணிமுதல் காலை 06.00 மணி வரை பாரிஸ், கிரெனோபில், லில்லி, லியோன், ஐக்ஸ்-மார்சேய், மான்ட்பெல்லியர், ரூவன், செயின்ட் எட்டியென் மற்றும் துலூஸ் ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பிக்கப்படுகிறது என அறிவித்தார். அறிவிக்கபட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டால், இது 1,500 யூரோக்களாக உயரும் எனவும் தெரிவித்தார். இந்த ஊரடங்கு உத்தரவு முதலில்ல நான்கு வாரங்களுக்கு இருக்கும். ஆயினும் டிசம்பர் வரையில் அது நீடிக்கவும் கூடும் எனத் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு பகுதிகளுக்குள், மக்கள் வேலைக்குச் செல்வதற்கு பொது போக்குவரத்து தொடர்ந்து இயங்கும் எனவும், பிரான்சிற்குள் எந்தவிதமான பயணத் தடை அல்லது பிராந்தியங்களுக்கு இடையில் செல்வதற்கான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதை அவர் நிராகரித்தார். பிரெஞ்சு டூசைன்ட் பள்ளி விடுமுறை சனிக்கிழமையன்று தொடங்குகிறது. விடுமுறை நாட்களில் மக்கள் பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் சுகாதார நெறிமுறைகளில் கவனம் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

வீட்டிலிருந்து பணிபுரியும் விடயம் பரிந்துரைக்கப்படுகிறது ஆனால் நிறுவனங்கள் அல்லது ஊழியர்களைக் கட்டாயப்படுத்தும் விதிகளை அவர் கொண்டு வரவில்லை. சிறு குழந்தைகளுடன் சிறிய வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது மிகவும் கடினம் என்பதால் அதனை கட்டாயமாக்கவில்லை என்றார்.

இப்போது ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 புதிய வழக்குகள் உள்ளன, மேலும் 200 பேர் வைரஸால் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் 32% கொரோனா வைரஸ் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

வைரஸின் பரவலைத் தடுப்பது, பாதிக்கப்படக்கூடியவர்கள், சுகாதார சேவை மற்றும் அதன் தொழிலாளர்களைப் பாதுகாப்பதே புதிய கட்டுப்பாடுகளின் நோக்கம் என்று அவர் கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.