உலகம்

கொரோனா பரவலால் சுய தனிமைப்படுத்தலில் இருந்து வெளிவந்த இங்கிலாந்து எலிசபெத் ராணி மாஸ்க் அணியாமல் வெளியில் வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் பிரிட்டனின் கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் செய்யப்பட்டதையடுத்து இரண்டாம் எலிசபெத் ராணி தன்னை சுயதனிமைப்படுத்திக்கொண்டார்.

அதன்பின்னர் அண்மையில் தென்மேற்கு இங்கிலாந்தின் போர்ட்டன் டவுனில் உள்ள பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு 94 வயதான எலிசபெத் ராணி மற்றும் அவரது பேரன் இளவரசர் வில்லியம் உடன் வருகை தந்தார்.

இதன்போது சமூக இடைவெளியை கடைப்பிடித்திருந்தாலும், இருவரும் மாஸ்க் அணியவில்லை.

உட்புற இடங்களில் மாஸ்க் அணியுமாறு இங்கிலாந்து அரசாங்கம் பரிந்துரைக்கிறது, அங்கு சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கடினமாக இருக்கலாம், மேலும் பொதுவாக சந்திக்காத நபர்களுடன் தொடர்பு கொள்ள நேரிடும் என்பதால் மாஸ்க் அணிவது அவசியமாகிறது.

இந்நிலையில் தற்போது மாஸ்க் அணியாமல் ஆய்வுகூடத்திற்கு சமூகம் அளித்திருக்கும் எலிசபெத் ராணி மற்றும் அவரது பேரன் இளவரசர் வில்லியம் ஆகியோரின் புகைப்படங்கள் வைரல் ஆகிவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.