உலகம்

சுவிற்சர்லாந்து விகிதாசார அடிப்படையில் ஐரோப்பாவின் அண்டை நாடுகளை விட அதி கூடிய கோவிட் -19 வைரஸ் தொற்றுள்ள நாடாக மாறிவருகிறது.

இது ஏனைய நாடுகள் சுவிற்சர்லாந்தை தமது கறுப்புப் பட்டியலில் அடையாளப்படுத்துவதற்கு வழி செய்கிறது. ஜேர்மனி கடந்தவாரத்தில் சுவிஸின் சில பிராந்தியங்களை தனது கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

இந்த நிலை சுவிஸ் மத்திய அரசினைக் கவலை கொள்ள வைத்திருக்கிறது. இவ்வாறான நிலையில் கடந்த இரு நாட்களாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி உறுப்பினர்களுக்கும், மாநில அரசுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில், இது தொர்பிலான அவசரப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதன் போது நாடாளாவிய ரீதியில் முடக்த்தைக் கொண்டு வருவதைத் தவிர்க்கவும், வைரஸுக்கு எதிரான ஒர பொது வேலைத்திட்டத்தினையும், அதற்கான விதிகளையும் உருவாக்குவது தொடர்பில் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மத்திய கூட்டாட்சி அரசு, ஒரு வரைவு கட்டளைச் சட்டத்தின் மூலம் தொற்றுநோய்களின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை கடுமையாக இறுக்குவதை மத்திய கூட்டாட்சி அரசு முன்னறிவித்திருக்கிறது. குறிப்பாக, இது கட்டாய பாதுகாப்பு முகமூடிகள் மற்றும் வெளிப்புறங்கள் உட்பட பொது இடங்களில் 15 க்கும் மேற்பட்டவர்களைக் கூட்டிச் செல்வதைத் தடைசெய்வதற்கும், தொலைதூர வேலை, பயிற்சி செய்வதற்கான பரிந்துரைகளையும் வழங்குகிறது.

15 க்கும் மேற்பட்ட நபர்களின் (குடும்பம், நண்பர்கள்) தனியார் கூட்டங்களில், சாப்பிடவும் குடிக்கவும் உட்கார்ந்தவுடன் முகமூடி அணிய வேண்டியது அவசியம். போதுமான இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும். கூட்டத்தின் அமைப்பாளர் கலந்து கொண்டவர்களின் தொடர்பு விவரங்களை எடுக்க வேண்டும். 100 க்கும் மேற்பட்ட நபர்களின் தனியார் கூட்டங்கள் பொதுவில் அணுகக்கூடிய வசதிகள் மற்றும் நிறுவனங்களில் மட்டுமே நடத்த முடியும்.

100 முதல் 1000 பங்கேற்பாளர்கள் வரை பல நபர்களுடன் பொது நிகழ்வுகள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும் தற்போதுள்ள நடைமுறையின்படி, அதிகபட்சமாக 100 பேர் கொண்ட பிரிவுகளாக அவர்களைப் பிரிக்கவும், தொடர்பு பதிவுளை மேற்கொள்ளவும் அரசு வலியுறுத்துகிறது.

சுவிற்சர்லாந்து முழுவதும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஆலோசனை மற்றும் முடிவெடுப்பது விரைவாக இருக்க வேண்டும் என்பதை மாநிலங்கள் மற்றும் கூட்டமைப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. இதனடிப்படையில் மத்திய கூட்டாட்சி அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும், அதற்கு முன்னதாக நாடாளவிய பொதுவிதிகள் குறித்து மாநில அரசுகளின் கருத்தைக் கோரியுள்ளதாகவும் பிந்திய செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.